காதலனால் கொடுமைகளை அனுபவித்த சௌந்தர்யா நஞ்சுண்டன்… பிக்பாஸில் வெளிவந்த உண்மைகள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே தற்சமயம் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஒரு பிரபலமாக மாறி இருப்பவர் சௌந்தர்யா நஞ்சுண்டன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை இரண்டு வகையான விஷயங்களை அது ஏற்படுத்தும்.

சில சமயங்களில் ஏற்கனவே இருக்கும் வரவேற்பை ஒரு பிரபலத்திற்கு குறைக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் மாறிவிடும். சில பிரபலங்களுக்கு அதிக வரவேற்பை உண்டாக்கி கொடுக்கும். ஓவியா நடிகர் கவின் போன்றவர்களுக்கெல்லாம் அப்படிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

காதலனால் நடந்த கொடுமைகள்:

இந்த சீசனில் அப்படியான வரவேற்பை பெறும் நடிகையாக சௌந்தர்யா நஞ்சுண்டன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பே சௌந்தர்யா நஞ்சுண்டன் வேற மாதிரி ஆபீஸ் என்கிற சீரிஸில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த சீரியஸில் நடித்த போது கூட தமிழகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில் வெப்சீரிஸை பொறுத்தவரை அதை பொதுமக்கள் அனைவரும் பார்ப்பது கிடையாது.

இந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. பிக் பாஸில் பலருடனும் பல விஷயங்களை பகிர்ந்து வரும் சௌந்தர்யா தனது காதல் கதை குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியிருந்தார்.

பிக்பாஸில் வெளிவந்த உண்மைகள்

கல்லூரி காலங்களில் இருந்து ஒரு நபரை நான் காதலித்து வந்தேன். ஆனால் அவர் மிகவும் கோபக்காரர் எடுத்ததற்கெல்லாம் என்னை திட்டி விடுவார் என்னை பலமுறை அவர் அடித்து இருக்கிறார். ஒருமுறை கண்ணாடி பாட்டிலை எடுத்து எனது மண்டையில் அடித்தார்.

ஆனால் அப்பொழுது நான் கொஞ்சம் நகர்ந்து விட்டதால் எனக்கு பெரிதாக அடிப்படவில்லை. அந்த அளவிற்கு மோசமாக இருந்தது பிறகு ஒரு காலகட்டத்திற்கு பிறகு இதெல்லாம் தவறு என்பது எனக்கு புரிந்தது. பிறகு நான் அவரை விட்டு விலகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

தற்சமயம் சௌந்தர்யா நஞ்சுண்டனின் அழகில் மயங்கி இருக்கும் ரசிகர்கள் இப்படி ஒரு பெண்ணையே இவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறான் யார் அவன் என்று அவரது காதலர் குறித்து விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam