நடிகர் ஜெயம் ரவி நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியிருக்கிறது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
இந்த படத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கும். இதில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் இன்பன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கினை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகை நித்யா மேனனின் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இப்படி சிறப்பாக அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிலையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேடையில் பேச வந்த நடிகை நித்யா மேனனிடம் உதவியாளர் கைகுலுக்க முயற்சி செய்கிறார். ஆனால், உடம்பு சரியில்லை.. உங்களுக்கு கோவிட் எதாவது வந்துரும்.. என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி அதனை தவிர்த்து விட்டு வணக்கம் சொல்கிறார் நடிகை நித்யா மேனன்.
அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இவராகவே சென்று.. இயக்குனரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். கை குலுக்குகிறார்.. எல்லாவற்றையும் செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் உதவியாளருடன் கை குலுக்கினால் தான் நோய் தொற்று ஏற்பட்டு விடுமா..?
அப்படி என்றால்.. இயக்குனர் நடிகர்களுடன் கை குலுக்கினால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாதா..? என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர்.
நடிகை நித்யா மேனன் இதற்கு ஏதேனும் விளக்கம் கொடுப்பாரா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary in English : At the recent release event for “Kadhalikka Neramillai,” actress Nithya Menon sparked quite a buzz online when she refused to shake hands with one of the helpers at the venue. The moment raised eyebrows, especially since just moments before, she was seen hugging her co-stars without a second thought.