“மசாலா பொருட்களை வைத்து தலைவலி போக்கலாமா..!” – இத்தன நாள் தெரியாம போச்சே..!

என்ன காரணத்தினால் தலைவலி ஏற்படுகிறது என்று தெரியாமல் அடிக்கடி உங்களுக்கு தலைவலி ஏற்படக்கூடிய பட்சத்தில் மசாலா பொருட்களை வைத்தே உங்கள் தலைவலியை நீக்க முடியும் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

head ache

எனினும் உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களை வைத்து உங்கள் தலைவலியை எளிதாக எப்படி குணப்படுத்தலாம் என்பது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தலைவலியை நீக்கும் மசாலா பொருட்கள்

👍நீங்கள் பிரியாணிக்கு பயன்படுத்தும் பட்டையை லேசாக பொடித்து அதை உங்கள் தலையில் பத்து போடுவதின் மூலம் திடீரென்று ஏற்படக்கூடிய தலைவலியை மிகச் சீக்கிரமே குணப்படுத்த முடியும்.

 இந்த பட்டையில் அதிகளவு ஆன்டி-ஆக்சைடுகள் நிறைந்து இருப்பதினால் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த அது உதவி செய்கிறது. மேலும் இதில் இருக்கும் நறுமணமானது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதின் மூலம் தலை வலி எளிதில் குணமாகும்.

head ache

👍ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் அதிகளவு இருக்கக்கூடிய இஞ்சியை சாறாகவோ அல்லது இஞ்சி டீயாகவோ வெதுவெதுப்பான சுடுநீரில் நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் தலைவலி எளிதில்  நீங்கலாம்.

👍கார சுவையைக் கொண்ட கிராம்பு தலைவலியை எளிது குணப்படுத்தக்கூடிய அற்புத மூலிகையாக திகழ்கிறது. புதினா இலை மற்றும் கிராம்பை மிக்ஸியில் பொடி செய்து அதை நீங்கள் டீயாகவோ காபியில் கலந்தோ குடித்து வந்தால் கட்டாயம் உங்களது தலைவலி குணமாகும். மேலும் இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் நன்கு தட்டி ஒரு துணியில் முடிந்து மூக்கில் நுகர்வதின் மூலம் உங்கள் தலைவலி நீங்கும்.

head ache

👍கடினமான மன அழுத்தம் மற்றும் பதட்டமான சூழ்நிலைகளில் தலைவலி ஏற்படலாம். மேலும் உணவு அருந்தாமல் இருக்கக்கூடிய சூழலைகளிலும் தலைவலி ஏற்படும். எனவே நிம்மதியான மனநிலையை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சியை மேற்கொள்வது உடலுக்கு நலம் தரும்.

அதுமட்டுமல்லாமல் மேற்கூறிய மசாலா பொருட்களை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு தலைவலி ஏற்படும் போது வலி நிவாரணிகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தலைவலியிலிருந்து விடுபட முடியும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam