சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், மகராசி, குலதெய்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீரித்திகா. சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தான் எதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்தேன் என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அம்மணி. இவருக்கு இணைய பக்கங்களில் லட்சக்கணக்கான பாலோவர்கள் இருக்கிறார்கள்.
நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இந்த சீரியலை தொடர்ந்து தொடர்ச்சியாக சன் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவரோடு மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆரியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரியனும் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியனின் திருமணத்தில் தன்னுடைய முதல் கணவரோடு ஸ்ரீரித்திகா கலந்து கொண்டார். ஆனால் இப்போது இருவரும் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்திருக்கும் நிலையில் தாங்கள் எதற்காக விவாகரத்து செய்தோம் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருந்தார்கள்.
ஸ்ரீரித்திகா தன்னுடைய முதல் கணவர் குறித்து கூறும் போது, அவர் நல்ல மனிதர் தான். அவரைப் பற்றிய குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எனக்கும் அவருக்கும் திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது.
ஆரம்பத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனதே தவிர முடிந்த பாடு இல்லை.
நான் சின்ன வயதில் ஒன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 30 வயதிற்கு மேலே வீட்டில் பார்த்து தான் எனக்கு முதல் திருமணத்தை செய்து வைத்தார்கள். ஆனால், நான் எதிர்பார்த்தது போல திருமண வாழ்க்கை எனக்கு அமையவில்லை.
நான் அதில் பெரிய ஏமாற்றம் அடைந்தேன். எனக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. இதனாலேயே நாங்கள் பேசி பரஸ்பரம் பிரிந்து விடலாம் என முடிவெடுத்தோம்.
யாராக இருந்தாலும் அவர்கள் இயற்கையான குணம் என்னவோ அப்படியே இருக்க வேண்டும். அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்க கூடாது. அவரை மாற்றுவது என்னுடைய வேலை கிடையாது.
இதனால் நான் அவரை விட்டு விலகிவிடலாம் என முயற்சி செய்தேன் என பேசி இருந்தார். இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது கணவர் ஆரியனுடன் படுக்கையில் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீரித்திகா.
Summary in English : Actress Srithika is making waves on the internet again! Recently, she shared a stunning photo with her second husband, Aryan, and it’s gone completely viral. Fans are buzzing with excitement over the couple’s adorable chemistry and style.