Honorable Chief Minister of Tamil Nadu responded to the remarks made by TVK leader and actor Vijay’s Speech against DMK.
நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் எதிரி திமுக என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்.
தன்னுடைய முதல் மாநாட்டிலேயே இதனை தெரிவித்து இருந்தார். மட்டுமில்லாமல் நேற்று நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தார் நடிகர் விஜய்.
மேலும் நேற்றைய பொதுக்கூட்டத்தில் முக்கியமாக தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் கொடுத்த அறிவுரை என்னவென்றால், அரசியல் களத்தில் யாருடனும் தர்க்கம் செய்யக்கூடாது.
தகாத முறையில் தரக்குறைவான முறையில் பேசக்கூடாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அப்படி பதில் அளிக்கும் போது உரிய ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும். கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. தனிநபர் தாக்குதலை முன்னெடுக்க கூடாது. உள்ளிட்ட பல்வேறு கட்டளைகளை தன்னுடைய தொண்டர்களுக்கு விதித்திருந்தார் நடிகர் விஜய்.
மட்டுமில்லாமல் தேவையற்ற விமர்சனங்களை கடந்து செல்ல பழகிக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று தெளிவாக கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நடிகர் விஜய் குறித்து மறைமுகமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்க தேவையில்லை. வாழ்க வசவாளர்கள். அதை பற்றி கவலைபடவே இல்லை. தேவையில்லாமல் எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கடந்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு சீமான் பற்றி கவலை கிடையாது கடந்து செல்லுங்கள் என்று மறைமுகமாக கூறினார்.. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விஜய் பற்றி கவலை கிடையாது கடந்து செல்லுங்கள் என்று விஜய் பாணியிலேயே பதில் எடுத்து கொடுத்திருக்கிறார்.
இது பெரிய ட்விஸ்ட்டா இருக்கே.. என்று இணைய பக்கங்களில் இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தவறு இருக்கும் இடத்தில் தான் பயம் இருக்கும். முதல்வர் முதல் சிறிய கட்சி வரை பயப்படக் காரணம் ஒருவர் என்றால் அவரால் அரசியல் சரித்திரம் உண்டாகும் என்று அர்த்தம். தளபதி @tvkvijayhq அண்ணன் வருகையால் மிரளும் கட்சிகள். #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/uhMyOyOZGM
— tvk_thozhar (@tvk_squad) November 4, 2024
Summary in English : In a recent public address, the Honorable Chief Minister of Tamil Nadu addressed the remarks made by TVK Leader and renowned actor Vijay. The Chief Minister emphasized the importance of constructive dialogue in addressing societal issues and reiterated the government’s commitment to fostering an inclusive environment for all citizens.