கடந்த 1990களில், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சுஜிதா. சத்யராஜ் நடித்த படம் பூவிழி வாசலிலே. இதில் பாபு ஆண்டனியை பார்த்தவுடன் மிரண்டுபோன நடிப்பில் அசத்தி இருப்பார் சுஜிதா. காதல் பரிசு, தேவர் மகன் உள்ளிட்ட படங்களிலும் குழந்தையாக நடித்திருந்தார்.
வளர்ந்த பின், சில படங்களில் இளம்பெண்ணாக முகம் காட்டினார். ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. மலையாள படங்கள் பலவற்றுக்கு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக சுஜிதாபணி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் அண்ணி தனம் கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருக்காகவே, பலரும் இந்த சீரியலை பார்க்கின்றனர் என்பது உண்மை.
இந்நிலையில், சுஜிதா புதுவீடு கட்டி, நேற்று கிரஹப்பிரவேசம் நடத்தி இருக்கிறார். இந்த நிகழ்வில் கணவர் தனுஷ் மற்றும் மகனுடன் பங்கேற்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.