சினிமா செய்திகள்

ரஜினியுடன் சுகன்யா ஜோடியாக நடிக்காததற்கு காரணம் இது தான்..! குண்டை தூக்கி போட்ட பிரபலம்..!

Published on

நடிகை சுகன்யா 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனால், நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிகை சுகன்யா இதுவரை எந்த படத்திலும் ஜோடி போட்டு நடித்ததில்லை.

தற்போது கூட அந்த மனக்குறை தனக்கு இருப்பதாக பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சுகன்யா. இதற்கு என்ன காரணம்..? முன்னணி நடிகராக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை சுகன்யாவுக்கு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையா..? அல்லது எந்த இயக்குனரும் வாய்ப்பு வழங்கவில்லையா..?

ரஜினிகாந்துடன் சுகன்யா நடிக்காமல் போனதற்கு என்ன காரணம்..? என பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் உடன் நடிக்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கம், ஏமாற்றம், மணக்குறை தற்போதும் சுகன்யாவுக்கு இருக்கிறது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முத்து திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை சுகன்யா தான்.

பிறகு ஏன் நடிகை சுகன்யா நடிக்காமல் மீனா நடித்தார்.. என்பதற்கான காரணத்தை நான் இப்போது சொல்லுகிறேன். முத்து படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது சுகன்யாவிற்கு கால் ஷீட் இல்லை. ஒரு மாதம் ஆகும் என்று கூறுகிறார்.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாதம் காத்திருந்து படப்பிடிப்பை தொடங்கலாம் இந்த படத்தில் சுகன்யா தான் ஹீரோயின் என்று கூறுகிறார். அதனால், ஒரு மாதம் வரை முத்து படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் அந்த படத்தின் முன்னேற்பாடுகளை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆனால், அப்போதும் சுகன்யாவிற்கு கால் சீட் இல்லை என்று கூறி விடுகிறார்கள். இந்த வேலையை செய்தது யார் என்றால் அவருடைய மேனேஜர் தான்.

ஒரு மாதத்தில் தன்னுடைய கால் சீட்டுகளை முடித்துவிட்டு முத்து படத்திற்கு கால் சீட் கொடுக்க சொல்லி இருக்கிறார் சுகன்யா. ஆனால், அப்படி செய்யாமல் அந்த ஒரு மாத கால் சீட்டை கிட்டத்தட்ட 1 1/2 மாதங்கள் அளவுக்கு இழுத்து வந்து விட்டார் அவருடைய மேனேஜர்.

முத்து படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் எல்லாம் ஆயத்தமாக இருக்கின்றன. இந்த நேரத்தில் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாது என்ற காரணத்தினால் நடிகை மீனாவை ஹீரோயினாக போட்டு படத்தை தொடங்கி விட்டார்கள்.

ஒருவேளை சுகன்யாவின் மேனேஜர் அவருடைய கால் சீட்டை ஒழுங்காக நிர்வாகம் பண்ணியிருந்தால் முத்து படத்தில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் ஒரு வேளை அவர் நடித்திருந்தால் அதற்கு அந்த படத்திற்கு பிறகும் ஒரு பத்து ஆண்டு காலம் அவருடைய சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்திருக்கும். அதனை தவற விட்டுவிட்டார்.

ஏனென்றால் முத்து திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக வெளிவந்தது. தற்போதும் கூட பல்வேறு பேட்டிகளில் முத்து படத்தில் நடிக்க முடியாத வேதனைகளை பதிவு செய்திருக்கிறார் நடிகர் சுகன்யா என்று பேசியிருக்கிறார் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

Ocean
Exit mobile version