ரஜினி தவறவிட்ட அந்த விஷயம்… சரியாக செய்து ஸ்கோர் செய்த சூர்யா.. இவர்கிட்ட கத்துக்கணும் போல..!

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பெரிய நடிகர்கள் திரைப்படம் என்பதால் மட்டும் ஒரு திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்து விடாது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை சொல்லப்போனால் யாராலும் தீர்மானிக்க முடியாது.

திரைப்படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்பது அவர்களுக்கே தெரியாது. இவ்வளவு வருடமாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக இருந்துவரும் கமலஹாசனுக்கே சில படங்கள் எப்படி வெற்றி அடைகின்றன என தெரிவதில்லை.

ரஜினி தவறவிட்ட அந்த விஷயம்

ஏனெனில் நிறைய உலக சினிமாக்களை தமிழில் அறிமுகப்படுத்திய போது கமல்ஹாசனுக்கு கிடைக்காத வரவேற்பு விக்ரம் திரைப்படத்தில் கிடைத்தது. இப்படி இருக்கும் பொழுது பப்ளிசிட்டி என்பது ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் அந்த படத்திற்கான விளம்பரப்படுத்தல் சரியாக நடந்தால் மட்டுமே படத்திற்கான வெற்றி தீர்மானிக்கப்படும். உதாரணத்திற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகும்.

ஸ்கோர் செய்த சூர்யா

இந்த திரைப்படத்தை இந்திய அளவில் வெளியிடும் பொழுது அந்த படத்திற்கான விளம்பரத்தை மிக சரியாக செய்தார் இயக்குனர் மணிரத்தினம்.

அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அதற்கான விளம்பரத்தை மேற்கொண்டார். ஆனால் வேட்டையன் திரைப்படத்தை இப்படி விளம்பரப்படுத்த தவறிவிட்டனர் படக்குழு. வேட்டையன் திரைப்படம் ஹிந்தி முதலான பல மொழிகளில் வெளியானது.

ஆனால் அந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. அதனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் நல்ல வசூலை இந்த படம் கொடுத்தது. தற்சமயம் 300 கோடியை தாண்டி வசூல் கொடுத்திருந்தாலும் கூட இந்த திரைப்படம் இன்னமுமே அதிக வசூலை கொடுத்திருக்கும்.

இவர்கிட்ட கத்துக்கணும் போல

ஆனால் சரியான விளம்பரப்படுத்தல் செய்யாத காரணத்தினால் இந்தப் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் போனது. இதனை அறிந்த சூரியா தன்னுடைய திரைப்படத்தை நல்ல வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்திருக்கிறார்.

ஏனெனில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் வேட்டையன் திரைப்படத்தை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு நிறைய வசூல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது எனவே டெல்லிக்கு சென்ற சூர்யா அங்கு பொதுமக்களிடம் நேரில் சென்று படத்தை குறித்து விளம்பரம் செய்து வருகிறார்.

ஏனெனில் இந்தியாவில் பாலிவுட் மார்க்கெட்தான் பெரிய மார்க்கெட் அங்கு படம் பெரிய வசூல் கொடுத்து விட்டாலே அதுவே பெரிய வெற்றியாக இருக்கும் என்பதால் சூர்யா இதை செய்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version