தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகர்களின் வாரிசுகள் படை எடுப்பு அதிகரித்து வருகிறது. அப்படி என்ட்ரி கொடுத்த Vijay Sethupathi-யின் மகன் சூர்யா சேதுபதியின் நிலை தான் தற்போது பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் ஒரு பாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்து பிறகு சினிமாவில் நுழைந்து மிகவும் கஷ்டப்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தி என்று மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார்.
மேலும், தற்பொழுது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 17 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அவருடைய மகன் சூர்யா சேதுபதி.
அவர் இன்னும் வளரவே இல்லை. ஆனால், அவரது ஆணவம் அதிகரித்து விட்டது என ரசிகர்கள் சூர்யாவை ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டனர். சூர்யா ஹீரோவாக நடித்த ஃபீனிக்ஸ் வீழான் என்ற படத்தை அனல் அரசு இயக்கியிருக்கிறார்.
இந்த படத்திற்கான பூஜை ஆரம்பித்த தினத்தில் தான் சூர்யா சேதுபதிக்கும் ராகு காலம் ஆரம்பித்தது. அந்த பூஜையில் பேட்டி அளித்த சூர்யா சேதுபதி மிகவும் தெனாவட்டாக நாம் என்னுடைய அப்பா பெயரில் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை. நான் வேறு என் அப்பா வேறு.
இந்த படத்தை கூட என் பெயரை சூர்யா என்றுதான் குறிப்பிடச் சொல்லி இருக்கிறேன். சூர்யா சேதுபதி என்று போடவில்லை. இப்படியாக வார்த்தையை அளந்து பேசாமல் சடசடவென பேசினார் சூர்யா.
விஜய் சேதுபதி எவ்வளவு தன்மையுடன் பேசுவர். அதில் சிறு துளி கூட உங்களிடம் இல்லை என கடுமையாக விமர்சிக்க தொடங்கினர் ரசிகர்கள். மேலும் உனது அப்பா இல்லை என்றால் உன்னுடைய பெயர் யாருக்கும் தெரியாது. இவ்வளவு சிறிய வயதில் ஹீரோவாக இருக்க முடியாது.
முதலில் சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்று பலரும் கண்டித்து வந்தனர். விஜய் சேதுபதி மகன் பேசிய பேச்சுக்கு நேர்மாறாக செய்துள்ள ஒரு காரியம் மீண்டும் ட்ரோல் மெட்டீரியல் ஆனது.
அவர் நடித்துள்ள பீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் தனது தந்தையான விஜய் சேதுபதியை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் பட பூஜையில் ஏதோ அப்பாவின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பில்டப் கொடுத்துவிட்டு இந்த விழாவில் படத்தை பிரமோட் பண்ணும் விதமாக உங்கள் தந்தை வந்திருக்கிறார். அப்பா பெயரில் வர வேண்டாம் என்று நினைத்து விட்டு எதற்காக விழாவிற்கு அப்பாவை அழைத்துள்ளீர்கள்..? என்று பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பத்திரிகையாளர்கள் கேட்ட இந்த கேள்வியை பார்த்து திகைத்து போன சூரியா சேதுபதி ..அதற்கு மறுப்பு விதமாக பதில் அளித்துள்ளார். இருப்பினும் சூர்யா சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் தம்பி பொது இடங்களில் பேசும்போது பார்த்து பேச வேண்டும் ஏதோ ஒன்றை பேசிவிட்டு பின்பு வருந்துவதில் எந்த பயனும் இல்லை என்று அட்வைஸ் செய்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பேசியுள்ள சூர்யா நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுத்தார். அதனால் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறேன் என விஜய் சேதுபதி மகன் சூர்யா பேசியது ரசிகர்களை வெறுப்பில் ஆழ்தியது.
இந்த வயசுல மாதம் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்வது கடினமாக உள்ளதா..? பாவம் செய்த சூர்யாவை கலாம் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.
Summary in English : Actor Vijay Sethupathi’s son, Suriya, recently made waves on the internet with a speech that had everyone talking—mostly because of his rather unique attitude! While some fans were all about his confident delivery and charisma, others couldn’t help but poke fun at a few of his quirky expressions and over-the-top gestures.