அம்மா அப்பாவை விட்டு பிரிய இதுதான் காரணம்.. முதன் முதலாக உண்மையை உடைத்த நடிகர் சூர்யா..!

தமிழ் சினிமாவில் அதிக ஈடுபாட்டோடு தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் அதிக வசூல் கொடுக்கும் படங்களின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதை பார்க்க முடியும்.

ஆனால் சூர்யாவை பொருத்தவரை அவர் வித்தியாசமான கதைகளங்களின் மீதுதான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து வசூல் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டு இருக்காமல் வெவ்வேறு வகையான கதைகளை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து வருகிறார்.

பிரிய இதுதான் காரணம்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்த நடிகை ஜோதிகாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் சூர்யா. சூர்யாவின் குடும்பத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒரு நடிகையை சூர்யா திருமணம் செய்து கொள்வது அவரது தந்தை சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.

ஏனெனில் சிவக்குமார் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து சினிமாவில் நடித்து வந்தவர் ஆவார். மிகவும் ஒழுக்கமான ஒரு நடிகராக இருந்தவர் ஆவார். அதனால் ஒரு நடிகை தன்னுடைய மகனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அவர் நினைத்து வந்தார்.

மனைவிக்காக செய்த செயல்:

இருந்தாலும் கூட சூர்யா ஜோதிகாவைதான் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்க கூடாது என்கிற விதிமுறையின் அடிப்படையில் இந்த திருமணம் நடந்தது. அதற்குப் பிறகு மீண்டும் ஜோதிகாவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

இப்பொழுது அவர் மீண்டும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். இதற்கு நடுவே கொரோனாவிற்கு பிறகு மும்பையில் வீடு வாங்கி அங்கேயே சூர்யா மற்றும் ஜோதிகா இவர்களின் குடும்பம் செட்டில் ஆக்கிவிட்டது. இதனை அடுத்து தற்சமயம் தந்தையை காண எப்போதாவதுதான் சூர்யா வருகிறார் என்று கூறப்படுகிற உண்மையை உடைத்த நடிகர் சூர்யா து.

உண்மையை உடைத்த நடிகர் சூர்யா

இது குறித்து சூர்யாவிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது பொதுவாகவே இந்தியாவில் திருமணம் நடந்து விட்டால் பெண்கள் தங்களுடைய தாய் தந்தையரை விட்டு விட்டு வர வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. ஆனால் மகன்கள் மட்டும் தங்களுடைய பெற்றோர்களுடன் இருக்கலாம் என்பது எனக்கு தவறாகப்பட்டது.

எனது மனைவியும் அவருடைய பெற்றோருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்கான இடைவேளையை அவருக்கு உருவாக்கி தர நினைத்தேன். ஏன் எப்போதும் பெண்கள் மட்டும் எல்லாவற்றையும் இழப்பவர்களாக இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் சூர்யா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam