சூர்யா 45 படத்தில் நடிக்கும் லப்பர் பந்து நடிகை.. நெனச்சாலே அமர்க்களமா இருக்கு!!

நடிகை சுவாசிகா லப்பர் பந்து படத்தில் நடித்ததை அடுத்து அவருக்கு சூர்யாவோடு சூர்யா 45 இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது அது குறித்த பதிவு. 

நடிகை சுவாசிகாவை பொறுத்த வரை சில ஆண்டுகளுக்கு முன்பு சாட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழில் அறிமுகம் கொடுத்து இருந்தார். இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து மலையாள பக்கம் சென்றார். 

மலையாளத்தில் பல படங்களை நடித்ததை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு மாமியாராக நடித்திருக்கிறார். 

சூர்யா 45 படத்தில் நடிக்கும் லப்பர் பந்து நடிகை..

இந்நிலையில் தான் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து சூர்யா, ஆர்ஜே பாலாஜி காம்பினேஷனில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்ற விஷயங்கள் கசிந்துள்ளது. 

லப்பர் பந்து படத்தில் தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தான் சூர்யா 45 நடிக்க இருக்கக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது. 

மேலும் இந்த படத்தில் சூர்யாவோடு திரிஷாவும் இணைந்துள்ள நிலையில் சுவாசிகாவிற்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே நயன்தாரா ஊர்வசி நடிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருந்த ஆர்ஜே பாலாஜி சூர்யா 45 படத்தை இயக்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் துவங்கியது. 

நெனச்சாலே அமர்க்களமா இருக்கு..

மேலும் மலையாள படங்களில் அழுத்தமான கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த சுவாசிகா தற்போது தமிழிலும் அதுபோன்ற கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் விரைவில் தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

இந்த இடத்தில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. 

Summary in English: Actress Swasika is making waves in the film industry with her latest announcement: she’s joining the cast of Surya’s upcoming film, “Surya 45,” in a lead role! This news has gone viral, and fans are buzzing with excitement. Swasika has always been known for her versatile performances, and teaming up with a powerhouse like Surya is sure to create some cinematic magic.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam