“பிரசவத்துக்குப் பின் அடிக்கடி மயக்கம் ஏற்படுகிறதா?” – இப்படி சரி செய்யுங்க..!

பிரசவத்துக்குப் பின் மயக்கம்: தாய்மை என்ற மிகப்பெரிய அந்தஸ்தை பிரசவத்திற்கு பின் பெறுகின்ற பெண்கள் அனைவரும் பிரசவ காலத்திற்குப் பிறகு  சின்ன, சின்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அந்த வகையில் பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய மயக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

After delivery

பிரசவம் ஆன பிறகும் சில பெண்களுக்கு அடிக்கடி தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் இருக்கும் பெண்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதில் நிவாரணம் பெற முடியும்.

பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய அதிக அளவு உடல் சோர்வு, ஆற்றல் இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இது போன்ற வாந்தி மயக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இது போன்ற சமயங்களில் நீங்கள் போதுமான அளவு ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த மயக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே கட்டாயமாக நீங்கள் சில நாட்கள் ஓய்வெடுங்கள்.

After delivery

மேலும் நீங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு தேவையான புரதம், இரும்பு சத்து போன்றவை கிடைத்து உங்கள் உடல் வலிமையாவதால் இதுபோன்ற சிறு, சிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

வெதுவெதுப்பான நீரில் குளிப்பதின் மூலம் உங்களுக்கு மயக்க பிரச்சனை ஏற்படாது. வெந்நீரில் குளிப்பதால் உங்கள் தசைகளில் தளர்வு ஏற்படுவதோடு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

உணவில் அதிக அளவு காய்கறி சூப்புகளை குடிக்கும் போது உங்களுக்கு மயக்க பிரச்சனை ஏற்படாது. மேலும் அதிக அளவு பழங்களை சாப்பிடுங்கள்.

After delivery

தினசரி குறைந்த அளவாவது நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு கட்டாயம் எந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் இரும்பு சத்து மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் குறிப்பாக வைட்டமின் பி12 மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு மயக்க பிரச்சனை ஏற்படாது.

எனவே மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதன் மூலம் பிரசவத்திற்கு பின் ஏற்படுகின்ற மயக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam