கோடை வந்துவிட்டாலே கொளுத்தும் வெயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள எண்ணற்ற குளிர்சாதன பொருட்களை நாம் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வோம். அது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தெரிந்திருந்தாலும் அந்த குளிர்ச்சியை விரும்பி நாம் சாப்பிடுவோம்.
எனவே நீங்கள் கோடை காலத்தில் கீழே கூறியிருக்கும் பொருட்களை உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் இந்த கோடையை நீங்கள் எளிதில் சமாளித்து விடலாம்.
கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பொருட்கள்
👌கோடை காலத்தில் நீங்கள் வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பழத்தை அதிகளவு சாப்பிடலாம். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தடுக்கப்படும். நீர்ச்சத்து அதிக அளவு உங்கள் உடலுக்கு கிடைப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.
👌91.45 சதவீதம் தண்ணீர் கொண்ட பழம் தர்பூசணி இதனால் தான் இதனை தண்ணீர் பழம் என்று அழைக்கிறார்கள். இந்த தர்பூசணி உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை தருவதினால் உங்கள் உடல் நீர் ஏற்றதோடு இருக்கும்ஶ்ரீ எனவே கோடையில் நீங்கள் தர்பூசணியை விரும்பி சாப்பிடுவது உங்கள் உடல் நலத்திற்கு நலம் தரும்.
👌உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்ற தயிரை நீங்கள் உங்கள் வீட்டிலேயே உண்டாக்கி உண்ணலாம். மேலும் இதில் நீர்மோர், மசாலா மோர் என பல வழிகளில் பல ரெசிபிகளை தயிரைக் கொண்டு செய்து நீங்கள் அட்டகாசமாக சாப்பிடுவதின் மூலம் உடல் குளிர்ச்சியாகும்.
👌கோடையில் எல்லாருக்கும் எளிய சாய்ஸ் இளநீர் தான். இதில் வைட்டமின்கள், தாதுப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இளநீரை குடிப்பதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கியம் கிடைக்கும்.
👌புதினா இலையை அதிகளவு கோடையில் சேர்த்து வருவதன் மூலம் உங்கள் உடலுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு புத்துணர்வாகவும் வைத்துக் கொள்ளும்.
👌இயற்கை நமக்கு கொடுத்த வர பிரசாதமான நுங்கினை நீங்கள் சாப்பிட வேண்டும். அவ்வாறு நொங்கினை உட்கொள்ளும் போது உடல் குளிர்ச்சி அடைவதோடு உடலுக்கு தேவையான நீர் சத்தும் கிடைக்கும்.
👌முலாம் பழத்தை நீங்கள் அதிக அளவு கோடையில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் புத்துணர்வோடும் நீர் சத்து தேவையான அளவு உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.