அரக்க பறக்க தமன்னாவிடம் பரபரப்பு விசாரணை? விரைவில் கைதா? ஷாக்கிங் ரிப்போர்ட்..

தமிழ் திரை உலகின் மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்தில் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது தமன்னா அதீத கிளாமரில் ஐட்டம் பாடலுக்கு பல்லாயிரம் கோடிகள் பணமாக பெற்று முகம் கூசும் அளவுக்கு ஆட்டம் ஆடுவதோடு நடித்து வருவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

அரக்க பறக்க தமன்னாவிடம் பரபரப்பு விசாரணை?

இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை மேற்கொண்டுள்ள விஷயம் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்த விசாரணை ஆனது கிட்டத்தட்ட 8 மணி நேரங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டதை அடுத்து விரைவில் நடிகை தமன்னா கைது செய்யப்படுவாரா? என்ற ரீதியில் கேள்விகள் தற்போது எழுந்த வண்ணம் உள்ளது.

நடிகை தமன்னா மீது நிதி மோசடி வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கை விசாரித்து வருகிறது. இதை அடுத்து தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த விஷயம் பேசும் பொருளாகி உள்ளது.

விரைவில் கைதா? ஷாக்கிங் ரிப்போர்ட்..

தமிழில் போதுமான அளவு வரவேற்பு இல்லாத சூழ்நிலையில் பிற மொழி படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிட்காயின் மட்டும் கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடியில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்று தமன்னா பங்கு பெற்று பணம் பெற்றுள்ளதாக சொல்லப்படும் நிலையில் தமன்னாவை நேரில் ஆஜராகும் படி சமன் அனுப்பியதை அடுத்து நேற்று பிற்பகல் அமலாக்கத்துறையின் கீழ் ஆஜராகி கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் தமன்னாவிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சொல்லப்படாத நிலையில் அவர் கைது செய்ய வாய்ப்பில்லை. எனினும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக மட்டுமே அவர்கள் விசாரணையை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரவியுள்ளது.

இதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் ஏமாந்து போய் இருக்கிறாரா? தமன்னா என்ற பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version