36 வயதில் அந்த மாதிரி காட்சி.. இயக்குனர்தான் காரணம்.. உண்மையை கூறிய நடிகை இனியா..!

தமிழ், மலையாளம் என்று இரண்டு சினிமாவிலுமே வெகு காலங்களாக நடித்து வருபவராக நடிகை இனியா இருந்து வருகிறார். பெரும்பாலும் இனியா நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு உண்டு.

ஆனால் இவர் நடிக்கும் படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரிதாக இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது கிடையாது. 2005 முதல் இனியா தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படத்திலேயே தமிழில் முதலில் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் வாகை சூடவா.

36 வயதில் அந்த மாதிரி காட்சி

தேசிய விருதை பெற்ற இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு கிராமத்து பெண்ணாக சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது.

தமிழில் மௌனகுரு, அம்மாவின் கைபேசி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் இனியா. இனியாவை பொருத்தவரை நல்ல கதைகளம் கொண்ட கதைகளைதான் அவர் தேர்ந்தெடுத்து நடித்தார் என்றாலும் கூட அவற்றில் பலவும் தமிழில் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இயக்குனர்தான் காரணம்.

அதனால் தான் அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைவாக இருந்து வந்தது அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் மாசாணி என்கிற திரைப்படம் விவரிக்கும் முக்கியமான பலமாக அமைந்தது.

அதில் முக்கிய கதாபாத்திரமாக இவர்தான் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு புலிவால், நினைத்தது யாரோ மாதிரியான ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் தமிழில் தொடர்ந்து ஒரு பெரிய நடிகைக்கு கிடைக்கும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

உண்மையை கூறிய நடிகை இனியா

இருந்தாலும் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் மாற்றி மாற்றி நடித்து வருகிறார் இனியா. இந்த நிலையில் தற்சமயம் ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்கிற ஒரு திரைப்படத்தில் இனியா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருடன் இன்னும் இரண்டு கதாநாயகிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முத்த காட்சிகளில் நெருக்கமாக இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மாதிரி கவர்ச்சி காட்சிகளில் இனியா நடிக்கமாட்டார். இருந்தாலும் இதில் நடித்தது குறித்து அவர் கூறும் பொழுது அது அந்த படத்திற்கு தேவையாக இருந்தது மேலும் இயக்குனர் அனைத்து காட்சிகளிலும் எனக்கு காம்ஃபர்ட்டாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார் அதனால் எனக்கு அந்த காட்சிகளில் நடிப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை என்று கூறியிருக்கிறார் இனியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version