விஜய் அரசியலுக்கு சென்ற பிறகு அவரது திரைப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிக ஈடுபாடு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அரசியலுக்கு சென்ற உடனே விஜய் கூறிய முதல் விஷயம் 2026க்கு பிறகு திரை உலகை விட்டு விலகப் போகிறேன் என்பதுதான்.
இதனால் விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் மத்தியில் அதிகமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோட் திரைப்படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 69 திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது.
வேட்டையனை காபி அடிக்குதா
அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகுகிறார். இந்த 69 ஆவது திரைப்படம் எப்படியும் பெரிய வரவேற்பு பெரும். அதிகமான ஹிட் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இதனால் இந்த திரைப்படத்தை கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் கதை அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்பதுதான் ஆரம்பத்தில் பேச்சாக இருந்தது.
இந்த திரைப்படத்தில் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை என்று இப்பொழுது கூறப்படுகிறது. ஏனெனில் முதலமைச்சர் ஆகாமலே முதலமைச்சர் படம் நடித்தால் அது தன்னையே பெருமைப்படுத்தி கொள்வதாக இருக்கும் என்பதால் விஜய் அந்த மாதிரியான கதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இதுதான் கதையாம்
அதே சமயம் இந்த திரைப்படத்தில் விஜய் போலீசாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த திரைப்படம் முழுக்க வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி வருவது போலவே யூனிபார்ம் எதுவும் போடாமல் சாதாரண சட்டை பேண்ட் போட்டுக்கொண்டுதான் விஜய் வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனவாம்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் என்கவுண்டர் மாதிரியான வன்முறைகளில் ஈடுபடாமல் சட்டரீதியாக அனைத்தையும் அணுகக் கூடிய ஒரு போலீஸ் கதாபாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட வேட்டையன் திரைப்படத்தில் இருக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தோடு ஒத்துப் போவதாக தெரிகிறது.
அப்படியே ஒத்து போகுதே
எனவே வேட்டையன் திரைப்படத்தின் கதையை ஏற்கனவே தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல ஹெச். வினோத் கதையை எழுதி விட்டாரா என்று ஒரு பக்கம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் அரசியலுக்கு வருகிற பொறுப்பு இருக்கிற காரணத்தினால் திரும்பவும் வன்முறையான ஒரு போலீசாக விஜய் நடிக்க மாட்டார்.
ஹெச்.வினோத்தும் அப்படியான படம் எடுக்கக் கூடியவர் கிடையாது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலேயே அதை பார்த்திருக்க முடியும் அதனால் தான் இந்த படத்தில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.