சினிமாவில் அறிமுகமாகும் தாமிரபரணி பானுவின் மகள்.. அச்சு அசல் அம்மா போலவே இருக்காரே..!

என்னதான் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றாலும் நடிகைகளை பொறுத்தவரை அவர்களது மார்க்கெட் என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான்.

அதற்குள் அவர்கள் நடித்து பணம் சம்பாதிப்பது ,பெயர் புகழ் சம்பாதிப்பது என இருந்து விட வேண்டும். ஒரு காலகட்டம் கடந்து விட்டால் அதன் பின் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

இளமை இருக்கும் வரை தான் நடிகைகள்:

மார்க்கெட் இழந்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகித்தான் விடுவார்கள். அதனால் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஜொலிக்க வேண்டும் என்பதற்காக,

திரைப்படங்களில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட காட்சிகளானாலும் காட்சிகள் லிப்லா காட்சிகள் உள்ளிட்டவற்றை கூட தயக்கம் காட்டாமல் நடித்து விடுகிறார்கள்.

 

அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல ஒரு இடத்தை பிடித்தவர் தாமிரபரணி நடிகை பானு.

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார் நடிகை பானு.

தாமிரபரணி நடிகை பானு:

இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த தாமிரபரணி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பானு நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி மிகப்பெரிய ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை தாமிரபரணி படத்திற்கு பிறகு இவரது படம் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்போது கணவன் குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வருகிறார்.

நடிகை பானுவுக்கு தற்போது கியாரா எனும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறது. கியாரா தற்போது,

பத்மகுமார் இயக்கத்தில் உருவாகும் பத்தாம் வளவு என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமாக இருக்கிறார்.

இந்த தகவலை நடிகை பானு அவரது சமூக வலைதள பக்கத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவுபடுத்தியிருக்கிறார்.

பானுவின் மகள் சினிமாவில் அறிமுகம்:

சினிமாவில் தான் விட்ட இடத்தை தனது மகள் பிடிக்க வேண்டும் என ஒரு உத்வேகத்துடன் நடிகை பானு தனது மகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே நடிகை மீனாவின் மகள் மற்றும் கொட்டாட்சியன் மகள் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருக்கும் வேலையில்,

தற்போது பானுவின் மகளும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தனது தனது பங்கை சிறப்பாக செய்வார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam