வேட்டையன் படம் வசூலால் ஆடி போயிட்டேன்.. இதுதான் முதல் நாள் வசூல் நிலவரம்..! உண்மையை கூறிய திரையரங்கு உரிமையாளர்.!

தற்சமயம் இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். நேற்று வெளியான வேட்டையன் திரைப்படத்திற்கு கலப்படமான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் படத்தின் கதை என்று பார்க்கும் பொழுது சமூகத்திற்கு முக்கியமான விஷயத்தை கூறும் வகையில் அதன் கதை அமைந்திருந்தது. ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து இப்படியான ஒரு கதையை எடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

வேட்டையன் படம் வசூலால் ஆடி போயிட்டேன்

இந்த நிலையில் வேட்டையின் திரைப்படம் முதல் நாள் வசூல் என்ன அளவில் இருக்கிறது என்பது பலரது கேள்வியாக இருந்தது. இது குறித்து  வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறும் பொழுது மொத்தமே 100 கோடியை கூட முதல் நாள் வசூலில் வேட்டையன் திரைப்படம் தாண்டவில்லை என்று கூறி இருந்தனர்.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளரான திருப்பூர் சுப்ரமணியம் இது குறித்து விவரமான கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது முதல் நாளே வேட்டையன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இதுதான் முதல் நாள் வசூல் நிலவரம்

எல்லா படங்களுக்கும் முதல் நாளிலேயே நிறைய வசூல் கிடைத்துவிடாது ஆனால் முதல் நாள் கிடைக்கும் வரவேற்புக்கு பிறகு அதிகமான வசூலை உருவாக்கிக் கொடுக்கும். அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் அதிக வசூலை பெற்று கொடுக்கும்.

ஜெயிலர் திரைப்படத்தை பொருத்தவரை அது ரசிகர்களுக்கான ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மட்டுமே பார்த்து ஜெய்லர் அப்படியான ஒரு வெற்றியை கொடுத்தது.

உண்மையை கூறிய திரையரங்கு உரிமையாளர்

ஆனால் இந்த படத்தை பொருத்தவரை இது பொதுமக்கள் ரசிகர்கள் இருவருக்குமே பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜெயிலரை விடவும் இந்த படம் அதிக வசூலை பெற்றுக் கொடுக்கும் இன்னும் நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறது.

இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண்டிப்பாக வேட்டையனின் வசூல் என்பது அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

 

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version