90ஸ் காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லாவண்யா.
இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் மிகப்பெரிய அளவில் அடையாளம் காணும்படியான படமாக அவருக்கு அமையவில்லை.
குறிப்பாக 1997 ஆம் ஆண்டு வெளிவந்த சூரிய வம்சம் திரைப்படத்தில் ஸ்வப்னம் என்ற ரோலில் நடித்து அறிமுகமானார்.
நடிகை லாவண்யா:
தொடர்ந்து கொண்டாட்டம், உயிருக்கு உயிராக, படையப்பா, சுயம்வரம், சங்கமம், ஜோடி, கண்ணு கண்ணுபட போகுதய்யா, சேது ,தெனாலி, கண்ணால் பேசவா ,வில்லன், சுந்தரா ட்ராவல்ஸ்,
ரன், எதிரி, சிந்தாமல் சிதறாமல், திருமலை, ஆஞ்சநேயா இப்படி பல்வேறு திரைப்படங்களில் 90ஸ் காலகட்டத்தில் முதல் 2000 கால கட்டம் வரை நடித்து வந்தார்.
இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேதங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கான மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால் இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த லாவண்யா தற்போது மீண்டும் பகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதனிடையே சீரியல்களில் நடித்து வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் சினிமா எவ்வளவு முக்கியமானது என்பதை பற்றியும்,
43 வயசில் திருமணம்:
சினிமாவிலிருந்து மார்க்கெட் குறைவதற்கான காரணம் பற்றியும் தனது கணவர் எவ்வளவு தனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் என பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார்.
நீங்கள் ஏன் 43 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்தீர்கள் என கேட்டதற்கு? எனது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது.
எனது குடும்பத்திற்கு நான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன். அதனால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து,
அதன் மூலம் வருமானம் சம்பாதித்து நான் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி எண்ணமே எனக்கு வரவில்லை.
அதன் பிறகு ஒரு எங்களுடைய குடும்ப பங்க்ஷனில் தான் என்னுடைய கணவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். பின்னர் நாங்கள் நட்பாக பழகி அது காதலாக மாறியது.
நாங்கள் காதலிக்கிறோம் என வீட்டில் சொன்ன உடனே இரு வீட்டார் சம்மதத்துடன் உடனே எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால், திருமணம் செய்து கொண்ட பின் நாம் 43 வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று எந்த ஒரு எண்ணமே எனக்கு வரவில்லை.
என் கணவர் இப்படிப்பட்டவர்:
காரணம் என் கணவர் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் இந்த படத்தில் நான் நடிக்கவா என கேட்டால் கூட,
உனக்கு பிடித்திருந்தால் நீ நாடி என முழு சம்மதத்தோடு தெரிவிப்பார். அதனால் முன்பை விட எனக்கு திருமணத்திற்கு பின்னர் தான் திரைப்படங்களில் சுதந்திரமாக நடிக்க முடிவந்தது.
என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியமே இல்லை என அந்த பேட்டியில் லாவண்யா கூறியிருக்கிறார்.