சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் தொடர்ந்த நடிகைகளுக்கு கிடைப்பது கடினமான விஷயமாகும். ஏனெனில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு நடிகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகும்.
இதனால் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைக்க துவங்கும். இதனாலேயே தொடர்ந்து அந்த குறிப்பிட்ட நடிகர்களை வைத்து திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆசைப்படுவது உண்டு.
சாம்ராஜ்யத்தை காலி செய்த நடிகை
ஆனால் நடிகைகளுக்கு சினிமாவில் அப்படியான எந்த ஒரு வாய்ப்புகளும் கிடையாது. ஒரு நடிகை தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் நடிக்காமல் இருந்தாலுமே கூட அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் நடிகைகளுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமோ ரசிகர் கூட்டமோ இருந்தது கிடையாது.இதனால் தொடர்ந்து நடிகைகள் தங்களை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இதற்கு பல விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்கள் ஒரு நடிகைக்கு தோல்வியை கொடுத்து விட்டாலே திரும்ப அவர்கள் பட வாய்ப்புகள் பெறுவது என்பது கடினமாகும்.
ஒரே படத்தில் கிடைத்த அதிர்ஷ்டம்
ஆனால் நடிகர்களுக்கு அப்படி கிடையாது. தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் தோல்வியை கொடுத்த பிறகும் கூட தமிழில் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலர் உண்டு. அதேபோல ஒவ்வொரு நடிகைக்கும் அவர்களுக்கு தூக்கிவிடும் திரைப்படம் ஒன்று இருக்கும்.
உதாரணத்திற்கு நடிகை சமந்தா நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கு தமிழ் தெலுங்கு இரண்டிலுமே அதிக வரவேற்புகள் கிடைக்க தொடங்கியது.
நயன்தாரா லெவலுக்கு வந்த நடிகை:
தற்சமயம் அப்படியான ஒரு திரைப்படம் மூலமாக அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார். பாலிவுட் நடிகையான திருப்தி திம்ரி. இவர் போன வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அனிமல் திரைப்படம் இந்தியாவில் பேசப்பட்ட படமாக இருந்தது. அதையும் தாண்டி அதில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனிமல் திரைப்படத்தில் நடிக்கும் போது திருப்தி 40 லட்சம் ரூபாய் தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே தன்னுடைய சம்பளத்தை 10 கோடி ரூபாயாக அவர் மாற்றி இருக்கிறார். ஏனெனில் அனிமல்ஸ் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்திருக்கின்றன.
ஒவ்வொரு திரைப்படத்தின் பொழுதும் சம்பளத்தை அதிகரித்து வந்த திருப்தி தற்சமயம் 10 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வந்திருக்கிறார். இருந்துமே கூட அவருக்கு வரவேற்புகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இதே நிலையை நயன்தாரா தமிழில் அடைவதற்கு கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆனது ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நயன்தாரா இப்பொழுதுதான் 10 கோடி ரூபாய் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார் ஆனால் அதை ஒரு வருடத்திலேயே சாதித்து காட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகை திருப்தி திம்ரி.