டி.டி.எஃப் ஒரு குப்பை.. தைரியம் இருக்கா? சவால் விடுறேன்.. கடுப்பான இயக்குனர்.!

தற்சமயம் டிடிஎஃப் வாசன் குறித்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாக துவங்கியிருக்கிறது.  டிடிஎஃப் வாசன் என்பவர் சமூக வலைதளம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர்.

மக்கள் மத்தியில் என்பதை விடவும் இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் என்று கூறலாம். டி.டி.எஃப் வாசன் இருசக்கர வாகனங்களைக் கொண்டு சாகசம் செய்பவராக இருந்து வருகிறார்.

டி.டி.எஃப் ஒரு குப்பை

அதேபோல அதிவேகமாக வாகனங்களை ஓட்டி அதையும் ஒரு சாகசமாக செய்து காட்டக் கூடியவர். இதனால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதிக சப்ஸ்க்ரைபர்களை பிடித்தார் டி.டி.எப் வாசன்.

அதே சமயம் சட்டரீதியான நிறைய பிரச்சனைகள் அவருக்கு வந்தது அவர் வாகனம் ஓட்டுவதில் நிறைய சட்ட விதிமுறைகளை மீறுவது தெரிய துவங்கியது. மேலும் இளைஞர்களை அவர் கெட்ட வழிக்கு கொண்டு செல்கிறார் என்பதும் காரணமாக இருந்தது.

தைரியம் இருக்கா?

இதனை தொடர்ந்து அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியது இந்த நிலையில்தான் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் நடிக்க போவதாக அறிவிப்பு வந்தது. செல் அம் என்கிற ஒரு இயக்குனர் தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.

இந்த நிலையில் அறிவிப்பு வந்த பிறகு படம் குறித்து எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது. திடீரென்று சமீபத்தில் இந்த திரைப்படம் குறித்து பேட்டி கொடுத்த இயக்குனர் கூறும் பொழுது இந்த படத்தில் இருந்து டி.டி.எப் வாசனை நீக்கிவிட்டோம்.

சவால் விடுறேன்

ஏனெனில் அவருக்கு வேறு சில வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை அவரை வைத்து தொடர முடியவில்லை. புது கதாநாயகனை சீக்கிரம் அறிவிப்போம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் டிடிஎஃப் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது என்னிடம் எதுவுமே கூறாமல் படத்தில் இருந்து நீக்கிவிட்டனர் என்பதாக அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார். இதனால் கோபமடைந்த இயக்குனர் தற்சமயம் அதற்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது டி.டி.எஃப் வாசன் செய்த தவறுகளுக்கு அவரை வைத்து யாராலும் பாடம் எடுக்க முடியாது. இருந்தாலும் ஒரு இயக்குனர் என்கிற பட்சத்தில் நாகரிகமாக அவரது குறைகளை கூறாமல் நான் அவரை நீக்கியதை மட்டும் கூறினேன்.

ஆனாலும் நான் அவரை குறை கூறியதையே ஒரு வீடியோவாக போட்டு என்னை வைத்து எப்பொழுதும் அவர் பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார். டி.டி.எஃப் வாசன் ஒரு குப்பை. ஒரு தங்கத்தை கொண்டு போய் யாரும் குப்பை தொட்டியில் போட மாட்டோம் குப்பையை தான் குப்பை தொட்டியில் போடுவோம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் செல் அம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam