நீ நல்லவ..! நான் கெட்டவன்..? நயன்தாரா குற்றச்சாட்டு.. தனுஷின் பரபரப்பு பதில்.. வெடித்த சர்ச்சை..

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில நிமிட வீடியோ காட்சிகளை தன்னுடைய திருமண வீடியோவில் பயன்படுத்தியது குறித்து நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளராக நடிகர் தனுஷ் நடிகர் நயன்தாராவுக்கு 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இதனால் பதறிப்போன நடிகை நயன்தாரா.. நடிகர் தனுஷை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுநாள் வரை யார் மீதும் பெரிதாக புகார் கூறாத நடிகை நயன்தாரா இப்படி நடிகர் தனுஷ் மீது திடீரென குண்டை தூக்கி போடுகிறாரே..? என்று பலரும் ஆரம்பத்தில் வியந்தனர்.

ஆனால், நேரம் நகர நகர நடிக நயன்தாராவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. தன்னுடைய திருமண வீடியோவை பார்ப்பதற்கு என்னுடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அறிக்கையில் வாய் கிழிய பேசி இருக்கும் நடிகை நயன்தாரா அப்படி காத்திருக்கும் ரசிகர்களுக்காக அந்த கல்யாண வீடியோவை ஏன் யூடியூபில் இலவசமாக வெளியிடவில்லை..? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். த

ன்னுடைய திருமண வீடியோவை கூட தன்னுடைய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்றால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் பணம் செலுத்தி தான் பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

தன்னுடைய திருமண வீடியோவை விற்பனை செய்திருக்கும் நயன்தாரா நடிகர் தனுஷ் பணமா போட்டு எடுத்த படத்திற்கு உரிமை கோரும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்..! இது எந்த வகையில் நியாயம்..?

நடிகர் தனுஷின் செயல் குறித்து சட்டபூர்வமான விளக்கம் எதையும் கொடுக்காமல் நடிகர் தனுஷை குறிவைத்து அவருடைய நடத்தையை கேள்வி எழுப்பும்படியும்.. அவருடைய வளர்ச்சியை கிண்டல் செய்யும்படியும்.. நடிகை நயன்தாரா தனிமனித தாக்குதல் நடத்துகிறார்.

நடிகர் தனுஷ் சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பி இருக்கும் பொழுது சட்ட ரீதியான பதிலை கொடுப்பதுதான் ஜனநாயக நடைமுறை. ஆனால், 10 கோடி ரூபாய் இழப்பீடு என்று கேட்டதும் நடிகை நயன்தாரா ஒரு நடிகரை அதிலும் தமிழ் சினிமாவின் முகமாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கக் கூடிய ஒரு நடிகரை தரம் தாழ்ந்து தனிமனித தாக்குதலில் ஈடுபடும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார்.

இப்படி நடிகை நயன்தாராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள். இது குறித்து உங்களுடைய பார்வையை பதிவு செய்யலாம்.

இந்நிலையில், தன்னுடைய கல்யாண கேசட்டை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விக்கிற நீ நல்லவ.. பணம் போட்டு நான் எடுத்த படத்துக்கு காசு கேட்கிற நான் கெட்டவன்..? என்று நடிகர் தனுஷ் கேட்பது போன்ற மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary in English : Nayanthara just made headlines by selling her wedding video to Netflix for a staggering price! Talk about a power move! Fans are buzzing with excitement, eager to catch a glimpse of the star-studded event. But hold on, because things took an unexpected turn when actor Dhanush stepped into the spotlight. He’s been in the news for asking for compensation related to a movie clip he produced, and it seems like there’s some tension brewing.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam