ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. யாரும் எதிர்பார்க்காத பரபரப்பு முடிவை எடுத்த த.வெ.க..!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாயிருக்கிறது. ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

ஜனவரி 17ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிப்ரவரி 5ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனு மீதான மறு பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்று 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெற கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா அவர்களின் திடீர் மறைவை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும், இணை அமைச்சராகவும் இருந்த ஈ வி கெ எஸ் இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றார். இவருடைய மகன் தான் திருமகன் ஈவேரா.

மகன் மறைந்த நிலையில் தந்தையே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 2024 டிசம்பர் 14ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார்.

இந்நிலையில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் 1,10,156 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் 43,923 வாக்குகளும். நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10,827 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் அந்த தொகுதி மக்களுக்கு நிறைய பரிசு பொருட்கள், இன்பச் சுற்றுலா, பட்டியில் அடைத்து வைத்து நாள் முழுக்க புது படங்கள், பிரியாணிம அசைவ விருந்து, பரிசு பொருட்கள் வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள், இளைஞர்களுக்கு முடி சவரம் செய்யும் ட்ரிம்மர்கள், செல்போன்கள் என குவியல் குவியலாக பரிசு பொருட்கள் குவிந்தன.

இந்த அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக ஊடகங்களும் வெளியிட்டன. அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தேர்தலும் நடைபெற்று இவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இளங்கோவன் அவர்களின் மறைவை தொடர்ந்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் புது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறு தேதியை அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் யாரேனும் போட்டியிடுகிறார்களா..? இந்த தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளுமா..? என்று தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் கேள்வி எழுப்பிய போது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் தவெக போட்டியிடாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் தன்னுடைய வாக்கு சதவீதத்தை காட்டக்கூடிய தேர்தலாக இதனை பார்க்கலாம். ஆனால், இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் அது 2026 தேர்தலை கடுமையாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷப்பரிட்சைக்கு விஜய் தயாராக இல்லை என்று கூறுகிறார்கள்.

இது குறித்து த.வெ.க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Summary in English : So, here’s the scoop: as of now, the TVK Party has decided not to throw their hat in the ring for the Erode East by-election. It’s a bit of a surprise for many, considering how vibrant and active they’ve been in local politics. This decision could shake things up a bit in the election landscape, leaving room for other parties to step into the spotlight.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam