சினிமா செய்திகள்
பாலியல் புகார்.. இணைய பிரபலம் உதயா சுமதி கொடுத்த பரபரப்பு பதிலடி..!
மக்கள் பார்வை என்ற கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் சித்ரா, தன்னை ஒரு வளர்ந்து வரும் பொதுநல சேவகராக அடையாளப்படுத்திக் கொண்டு, யூடியூபில் பிரபலமான நபர்களின் உண்மையான முகத்தை சில ஆதாரங்களுடன் வெளியிடுவதாகக் கூறி, அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அதில், யூடியூபர் உதயா சுமதி குறித்து அவர் பேசியது பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.
திருச்சி சாதனா என்ற யூடியூபர், உதயா சுமதிக்கு ரேட் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக சித்ரா குற்றம் சாட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த உதயா சுமதி, ஆதாரம் இல்லாமல் தன் மீது அபாண்டமான பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ள சித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
உதயா சுமதி தனது புகாரில், “என் கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு தனி மனுஷியாக என் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வருகிறேன்.
என் குடும்பம், என் குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கும் என் மீது ஊடகங்களில் இப்படி அபாண்டமான குற்றச்சாட்டை வைத்த சித்ரா, அதே ஊடகங்களில் விளக்கம் கொடுக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். என்னுடைய நடத்தை பற்றி மோசமாக உருவகப்படுத்தியதற்கு அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் குற்றச்சாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உதயா சுமதிக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் எந்த மாதிரியான திருப்பங்களை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அள்ள அள்ள பணம்..! – பங்குச்சந்தையில் பணம் அள்ளுவது எப்படி..?