ஷாப்பிங் மாலில் மோசமாக மகள் செய்த காரியம்.. உண்மையை உடைத்த வனிதா விஜயக்குமார்..!

தமிழ் சினிமாவை விடவும் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் நடிப்பதற்கு வந்தார்.

ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து சினிமாவின் மீது வெறுப்பு உண்டானதால் பிறகு சினிமாவை விட்டு விலகினார் வனிதா விஜயக்குமார். தொடர்ந்து இவருக்கு விவாகரத்து நடந்து வந்ததால் அதிக பிரபலம் அடைந்தார் வனிதா விஜயகுமார்.

ஷாப்பிங் மாலில் நடந்த சம்பவம்:

இந்த நிலையில்தான் விஜய் டிவியில் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு தமிழ்நாட்டு அளவில் அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

மக்கள் மத்தியிலும் இவருக்கு என்று வரவேற்பு இருந்தது. தொடர்ந்து இதனை அடுத்து விஜய் டிவி இவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மகள் செய்த காரியம்

அதிலும் டைட்டில் வின்னராக வனிதா விஜயகுமார்தான் இருந்து வருகிறார். இதனை அடுத்து யூட்யூப் மாதிரியான மற்ற தளங்களிலும் பிரபலம் அடைய தொடங்கினார் வனிதா. தற்சமயம் தொடர்ந்து மீண்டும் தமிழில் நடிக்க துவங்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறது.

உண்மையை உடைத்த வனிதா விஜயக்குமார்

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகள் ஜோவிகா விஜயகுமாரையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்திருந்தார் வனிதா. போன வருடம் வெளியான பிக் பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் ஜோவிகா.

அதன் மூலம் அவருக்கும் வரவேற்பு கிடைக்க துவங்கியது. இந்த நிலை தனது மகள் ஜோவிகா குறித்து ஒரு பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எப்பொழுதும் ஜோவிகாவை சிறுவயதாக இருக்கும் பொழுது  ஷாப்பிங் மாலுக்கு அழைத்துக் கொண்டு செல்வோம்.

அங்கு செல்லும் ஜோவிகா கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று காணாமல் போய்விடுவாள். பிறகு பதறி போய் நாங்கள் அனைவரும் ஷாப்பிங் மால் முழுக்க அவளை தேடிக் கொண்டிருப்போம்.

பிறகு தான் தெரிந்தது ஒவ்வொரு முறையும் எங்களிடமிருந்து காணாமல் போய் ஹெல்ப் டெஸ்க் எனப்படும் பகுதியில் போய் அவளாகவே அமர்ந்து கொள்வார். இதை தொடர்ந்து வந்தாள் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version