எந்த நாய் வேணா குலைக்கட்டும்.. பைத்தியமா நீ..!சினிமா பிரபலத்துக்கு வார்னிங் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் செப் வெங்கடேஷ் பட். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து அதிக அனுபவம் பெற்றவரான செஃப் வெங்கடேஷ் பட் முதன்முதலாக விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்தார்.

அதன் மூலமாக விஜய் டிவியில் பிரபலமானார். அதற்குப் பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெற தொடங்கினார். ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் மிகவும் டெரரான ஒரு நடுவராகதான் இருந்து வந்தார்.

எந்த நாய் வேணா குலைக்கட்டும்

அதிலும் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர்களை திட்டி கொண்டே இருப்பார் வெங்கடேஷ் பட். அப்படிப்பட்ட வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முற்றிலுமாக மாறுபட்டவராக இருந்தார்.

அந்த நிகழ்ச்சி துவங்கிய பொழுது அதில் மிக ஜாலியாக இருந்து வந்தார் வெங்கடேஷ் பட். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு கோமாளிகள் ஒரு வகையில் காரணம் என்றால் செஃப் வெங்கடேஷ் பட் இன்னொரு பக்கம் முக்கிய காரணமாக இருந்தார்.

பைத்தியமா நீ

இந்த நிலையில் அவர் பணிபுரிந்து வந்த மீடியா மிஷன் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகியதை அடுத்து அவரும் அதிலிருந்து விலகி சன் டிவிக்கு சென்று விட்டார். சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக் டூப் குக் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார் வெங்கடேஷ் பட். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் வெங்கடேஷ் பட் குறித்து நிறைய தவறான கருத்துக்களை ஒரு யூ ட்யூப் வீடியோவில் கூறியதாக கூறப்படுகிறது.

வார்னிங் கொடுத்த வெங்கடேஷ் பட்

அதாவது விஜய் டிவியை விட சன் டிவியில் அதிக வருமானம் வருவதால்தான் வெங்கடேஷ் பட் அங்கு சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வெங்கடேஷ் பட் கூறும் பொழுது உண்மையில் விஜய் டிவியை விட சன் டிவியில் எனக்கு சம்பளம் குறைவு தான்.

ஆனால் எனக்கு உதவி செய்த மீடியா மெஷின்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றுதான் நான் அவர்களுடன் சன் டிவிக்கு சென்றேன். பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசியதற்கு நிறைய ரசிகர்கள் எனக்காக சப்போர்ட் செய்து பதில் அளித்து இருந்தீர்கள்.

அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் ஆனால் பயில்வான் ரங்கநாதன் பணம் சம்பாதிப்பதற்காக இப்படி செய்கிறாரா? அல்லது மனநலக் கோளாறு காரணமாக இப்படி செய்கிறாரா என்று தெரியவில்லை அவரை விட்டு விடுங்கள். இப்படி அவருக்கு தவறாக கமெண்ட் செய்வது என்பது சாணியின் மீது கல் எறிவது போன்ற ஒரு விஷயம் தான், எந்த நாய் குலைச்சாலும் நாம சூரியனாவே இருப்போம் என்று கூறி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version