Light off பண்ணி தான் ட்ரெயின் பண்ணுவாரு.. மரத்துக்கு பின்னாடி தான் எல்லாமே.. இப்போ மீடுனு மரியாதையை கெடுக்குறாங்க..

குமுதத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பழம்பெரும் நடிகையான வெண்ணிறாடை நிர்மலா மீடு புகார் பற்றி கூறியதோடு இது நடந்த சமயத்தில் ஏன் சொல்லவில்லை. தன் காரியத்தை சாதித்துக் கொண்ட பிறகு சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் என சாடி இருக்கிறார்.

மேலும் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்த எம்ஜிஆர் சிவாஜி போன்றவர்களோடு நடிக்கும் போது குறிப்பிட்ட வரைமுறைகளை ஃபாலோ செய்ய வேண்டும். குறிப்பாக அவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சத்தம் போட்டு சிரித்துப் பேச கூடாது என்பது போன்ற பல கண்டிஷன்கள் கூறினார்.

Light off பண்ணி தான் ட்ரெயின் பண்ணுவாரு..

மேலும் முன்னணி நடிகராக இருந்த எம் ஜி ஆர் பலருக்கு பதில் அளிக்கக்கூடிய சூழ்நிலையிலும் அரசியலிலும் தன்னை வளர்த்து வந்த சமயத்தில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே வந்து போடப்பட்டு இருக்கும் டேபிளில் இருக்கும் லைட்டை ஆப் செய்து வேண்டிய நோட்சை அவர் கைப்படவே எழுதுவார்.

மேலும் ஒருவருக்கு பதிலடி கொடுக்கக்கூடிய விஷயங்களில் சொல்ல வேண்டிய கருத்தை அவரவர்களை சொல்வது தான் சரி, இல்லை என்றால் அது வெவ்வேறு வடிவத்தில் மாறி கடைசியில் வேறு ஒன்றாக பிரதிபலிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

மரத்துக்கு பின்னாடி தான் எல்லாமே..

அன்று கேரவன் இல்லாத காலம் என்பதால் மேக்கப் ஐ சரி செய்ய துணிமணிகளை மாற்ற என எல்லாத்துக்குமே மரத்துக்கு பின்னாடி தான் நின்று செய்து கொள்ள வேண்டும் அந்த சமயங்களில் ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் நடிகைகளுக்கு பக்க பலமாகவும் துணையாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று நிலைமையே வேறு அவுட்டோர் இண்டோர் போன்ற இரண்டு நிலைகளிலும் பிரபலங்கள் கேரவன் இல்லாமல் இருப்பதில்லை அந்தளவு நடிகர் நடிகைகளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே கேரவன் மாறிவிட்டது என சொல்லலாம்.

இப்போ மீடுனு மரியாதையை கெடுக்குறாங்க..

மேலும் அன்று பிரபல நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் குணச்சித்திர நடிகைகள் என அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் குழுமி அவர்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தது.

ஆனால் இன்று அது போன்ற நிலைமை இல்லை. ஒவ்வொருவரும் ஷூட்டிங் முடிந்து தனது பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு கேரவனில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.

இதன் மூலம் ஒரு சமூகமான உறவு நிலை என்பது நடிக்கும் நடிகர் மற்றும் நடிகர்களுக்குள்ளே போதுமான அளவு இல்லை இடைவெளி அதிகரித்து உள்ளது என கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து மீடு புகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பேசி இருக்கக்கூடிய அட்ஜெஸ்மென்ட் எதற்கு செய்ய வேண்டும். எதற்கு உடன்படுகிறார்கள் பின்பு இதைப் பற்றி பேசுகிறார்கள் என்று அடுக்கடுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்தவர்களின் பேச்சுக்களுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam