சமீபத்தில் வெளி வந்த ரஜினியின் போலீஸ் திரைப்படங்களிலிருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்து இருக்கிறது.
ஜெயிலர், தர்பார் மாதிரியான எல்லா திரைப்படத்திலும் பேசப்படாத சமூக நீதியை வேட்டையன் திரைப்படம் பேசியிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான ஜெயிலர் மற்றும் தர்பார் திரைப்படங்களில் நிறைய கொலைகளை ரஜினிகாந்த் செய்வார்.
அந்த கொலைகளுக்கு போலீஸ் கூட அவரை பிடிக்காது ஏனெனில் அவரே ஒரு போலீஸ் என்பதால் அவரை பிடிக்க யாரும் வரமாட்டார்கள். இப்படித்தான் கதை சொல்வதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு உயிரை என்கவுண்டரில் கொல்வது கூட தவறுதான் என்னும் வகையில் எடுக்கப்பட்ட முதல் மாஸ் ஹீரோ திரைப்படம் வேட்டையன்.
வேட்டையன் கதை:
ஏனெனில் இதற்கு முன்பு விஜய், சூர்யா, விக்ரம் என்று பலரும் நடித்து போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் எந்த ஒரு திரைப்படத்திலும் போலீஸ் செய்யும் அடக்கு முறையை அந்த ஹீரோவை வைத்து காட்டியது கிடையாது.
அந்த விஷயத்தில் ரஜினி இப்படியான ஒரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம் என்றுதான் கூற வேண்டும். முதல் நாள் வசூலை பொருத்தவரை வேட்டையன் 80 கோடிதான் வசூல் செய்தது. ஆனால் முதல் நாள் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
ப்ரேக் செய்த வேட்டையன்
அதனை தொடர்ந்து இப்பொழுது திரைப்படத்திற்கு காட்சிகள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. நிறைய திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படத்தின் காட்சிகளையும் அதிகரித்து இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் 155 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது வேட்டையன் திரைப்படம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கேரளாவில் வேட்டையன் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கேரளாவில் வேட்டையின் திரைப்படம் மூன்று நாட்களில் 11 கோடி வசுல் செய்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
தளபதி ரசிகர்கள் ஷாக்
கேரளாவில் பொருத்தவரை அங்கு விஜய் ரசிகர்கள்தான் அதிகம் ஆனால் விஜய் நடித்த கோட் திரைப்படம் மொத்தமாகவே 12.4 கோடி தான் கேரளாவில் வசூல் செய்தது. ஆனால் வேட்டையன் படம் கடந்த மூன்று நாட்களிலேயே 11 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்யும் என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக இது கோட் திரைப்படத்தின் வசூலை பிரேக் செய்யும் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.