வேட்டையன் ரிலீஸ் சிக்கல்.. உண்மையான காரணம் என்ன தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் மக்கள் மத்தியில் முக்கியமான அரசியலையும் சமூக நீதியையும் பேசும் இயக்குனர்களோடு ரஜினி இணைந்து நடிக்கும் போது அந்த திரைப்படம் எப்படியும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்துவிடும்.

வேட்டையன் ரிலீஸ் ஆகுமா

உதாரணத்திற்கு இதற்கு முன்பு வந்த காலா கபாலி மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனரான தா.செ ஞானவேலை பொருத்தவரை ஒரு கமர்சியல் கதாநாயகனுக்கு ஏற்ற மாதிரி ஒரு சமூக நீதி கதையை அவரால் எழுத முடியும்.

ஜெய் பீம் திரைப்படத்தில் கூட சூர்யாவிற்கு ஒரு கெத்தான கதாபாத்திரத்தை கொடுத்து, அதே சமயம் படத்தில் முக்கியமான விஷயத்தையும் பேசி இருப்பார் ஞானவேல். அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் தொடர்பான பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வந்த புது சிக்கல்

இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது முக்கியமாக படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருப்பது அதிக ஆவலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வருகிற பத்தாம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது வேட்டையன் திரைப்படம்.

இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இது குறித்து எதிர்பார்ப்பு இன்னமும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து புதிய பிரச்சினைகள் துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ரஜினி திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தற்சமயம் அவர்கள் லைக்கா நிறுவனத்தை நாட இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

பிரமுகரின் தலையீடுதான் காரணமா

ரஜினி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வெளியான திரைப்படம் தர்பார். தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. இந்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்திருந்தது.

இதனால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் இதற்காக இழப்பீடு கேட்டிருந்தனர். அப்பொழுது லைக்கா நிறுவனம் அடுத்து வெளியாகும் ரஜினி படத்தின் போது அந்த இழப்பீட்டை வழங்குவதாக கூறியிருந்தது இந்த நிலையில் தற்சமயம் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவர்கள் இந்த இழப்பீடு தொகையை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் லைக்கா நிறுவனம் படத்தின் வெளியீட்டை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறது. இதன் நிறுவனரான உதயநிதி பெரிய அரசியல் பிரமுகர் என்பதால் யாரும் படத்தை வெயிட விடாமல் செய்ய முடியாது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? இல்லையா என்கிற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam