புக்கிங்லையே இத்தனை கோடியா.. விஜய் பட சாதனையை முறியடித்த வேட்டையன்..!

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெயலர் திரைப்படம் முடிந்ததுமே வேட்டையன் திரைப்படத்தின் பட வேலைகள் துவங்கிவிட்டன.

ஆனால் கிட்டத்தட்ட இந்த படத்தை முடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு அதிகமாக நேரம் எடுத்திருக்கிறது. இப்பொழுது ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் எல்லோருமே மிக தாமதமாகதான் படப்பிடிப்பை முடிக்கின்றனர்.

இத்தனை கோடியா?

இதுவே ரஜினிக்கு நிறைய உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது. ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் திரைப்படம் என்பதையும் தாண்டி அந்த படத்திற்கு இயக்குனர் தா.செ ஞானவேல் காரணமாக அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றால் வெறும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும்.

அதை தாண்டி படத்தின் கதை மிக சாதாரணமான கதையாகதான் இருக்கும். ஆனால் இயக்குனர் தா.செ ஞானவேலை பொறுத்தவரை படத்தில் அடிதடி காட்சிகளைத் தாண்டி பேசுவதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். ஜெய்பீம் திரைப்படத்திலேயே மிக முக்கியமான ஆழமான கருத்தை வெளிப்படுத்தி இருந்தார் தா.செ ஞானவேல் என்பதால் இந்த திரைப்படத்திலும் அப்படியான கருத்துக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனையை முறியடித்த வேட்டையன்

ஆனால் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஞானவேல் கூறும் பொழுது ரஜினிகாந்த் போலதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி இருப்பதால் இதில் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேட்டையன் திரைப்படத்தின் புக்கிங் ஓபன் செய்யப்பட்டது. ஓபன் செய்யப்பட்ட இரண்டு தினங்களிலேயே எக்கச்சக்கமான வசூலை கொடுத்திருக்கிறது வேட்டையன் திரைப்படம்.

இதுவரை உலக அளவில் மொத்தமாக 50 கோடிக்கு அதிகமாக வேட்டையன் படத்திற்கு டிக்கெட் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் முதல் நாளே 100 கோடியை கடந்த வசூலை வேட்டையன் திரைப்படம் கொடுக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. விஜய் நடித்த லியோ படத்தின் டிக்கெட் புக்கிங்கை இது கடந்துள்ளது என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version