இயக்குனர் சொன்ன எதையுமே காணோம்.. வேட்டையன் ட்ரைலரால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள்..!

தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்த திரைப்படம் தோல்வியே காணவில்லை.

இதனால் தொடர்ந்து அவரின் சம்பளமும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. லால் சலாம் திரைப்படத்திற்கே இவர் 150 கோடி சம்பளமாக வாங்கியதாக பேச்சுகள் இருக்கின்றன. வேட்டையன் திரைப்படத்திற்கு அதைவிட எப்படியும் அதிகமாகதான் சம்பளம் வாங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

எதையுமே காணோம்

தொடர்ந்து வரிசையாக போலீஸ் திரைப்படமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தில் துவங்கி வரிசையாக ஜெயிலர் திரைப்படத்திலும் போலீசாக நடித்திருந்தார்.

தற்சமயம் வேட்டையன் திரைப்படத்திலும் போலீசாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக அதிக பிரபலம் அடைந்த தா.சே ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வேட்டையன் ட்ரைலர்

அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ரானா டகுபதி, பகத் ஃபாசில் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பேன் இந்தியா படமாக இந்த திரைப்படம் வெளியாக இருப்பதனால் இந்திய அளவில் முக்கிய நடிகர்கள் பலரையும் இதில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

மேலும் அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த படம் குறித்து அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் ரஜினிக்கு எதிரான ஒரு கதாபாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிருப்தி அடைந்த ரசிகர்கள்:

இந்த திரைப்படம் துவங்கிய காலகட்டம் முதலே இந்த திரைப்படம் என்கவுண்டர்களுக்கு எதிரான ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்திலேயே இயக்குனர் தா.சே ஞானவேல் காவல்துறையினர் செய்யும் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக நிறைய விஷயங்களை படத்தில் பேசியிருப்பார்.

மேலும் என்கவுண்டர் மூலமாக மக்களை கொலை செய்வது தவறு என்கிற வாதத்தை முன் வைத்திருப்பார் தா.செ ஞானவேல். ஆனால் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு நிறைய என்கவுண்டர் காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ட்ரெய்லரில் பார்க்கும் பொழுது என்கவுண்டருக்கு ஆதரவான ஒரு கதாபாத்திரமாக ரஜினியின் கதாபாத்திரம் இருக்கிறது. இது ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்துவிட்டு தற்சமயம் எதிர்பார்ப்போடு இருந்து வரும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய ஹீரோவின் திரைப்படம் என்பதால் தா.செ ஞானவேல் தற்சமயம் தடம் மாறி இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version