விடாமுயற்சியில் இதை எதிர்பாக்காதிங்க.. இயக்குனர் மகிழ்திருமேனி கூறிய பகீர் தகவல்..!

விடாமுயற்சி படம் குறித்து படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி முன்னணி வார இதழான குமுதம் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி இணைய பக்கங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் விடாமுயற்சி படத்தின் இயக்குனர். அதில் ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

அவர் கூறியதாவது, விடாமுயற்சி படத்தின் கதை அஜித் சாருக்கு மிகவும் பிடித்து விட்டது. படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார். உடனே நான் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்கு இந்த கதையில் என்னென்ன செய்யலாம் என யோசிப்பதற்கு முன்பே அஜித் சார் தலையிட்டு இந்த கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள்.

இது எல்லோருக்குமான படம். எனவே எனக்காக.. என்னுடைய ரசிகர்களுக்காக இந்த படத்தில்.. நீங்கள் சொன்ன கதையில்.. எதையும் கூட்டவோ.. குறைக்க வேண்டாம். உங்களுக்கு உங்கள் விருப்பம் போல படம் எப்படி வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுபோல படம் ஆக்குங்கள் என எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்.

அதனால் வழக்கமான அஜித் படங்கள் இருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம். விடாமுயற்சி என்ற தலைப்பை தேர்வு செய்தது அஜித் சார் தான்.

அதன் பிறகு எத்தனையோ தலைப்புகளை நாங்கள் யோசித்தோம். ஆனால், கதைக்கும் தலைப்புக்கும் அவ்வளவு ஒரு பிணைப்பு இருந்தது. இந்த தலைப்பை விட்டால் இந்த கதைக்கு பொருத்தமான வேறு தலைப்பு என்பது வெறுமனே ஒரு தலைப்பாக மட்டுமே இருக்கும்.

இந்த கதைக்கும் விடாமுயற்சி என்ற அந்த தலைப்புக்கும் மிக நெருக்கமான ஒரு உயிரோட்டமான பிணைப்பு இருக்கிறது. அதனால் விடாமுயற்சி என்பதே படத்திற்கு தலைப்பாக வைத்து விட்டோம் என கூறியிருக்கிறார்.

அதேபோல நடிகர் அஜித்குமார் ஒரு மாஸ் நடிகர் என்பதால் அவருக்கான ஒரு மாஸ் காட்சிகள் 10 பேரை தூக்கிப் போட்டு மிதிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் நான் வைக்கவே இல்லை. ஏனென்றால் உங்களைப் போல.. என்னை போல ஒரு சாதாரண மனிதன் எப்படி நடந்து கொள்வான்.. அவனுடைய பார்வையில் ஒரு பிரச்சினையை எப்படி எல்லாம் சமாளிக்க முயற்சி செய்வான்.. இதுதான் இந்த படத்தினுடைய கதையே தவிர.. ஒரு மாஸ் ஹீரோஒரு பிரச்சினையை அணுகுவது போல இருக்காது.. மிகவும் சாதாரணமான.. ஜனரஞ்சகமான ஒரு படமாக இருக்கும் என கூறியுள்ளார் மகிழ்திருமேனி.

நன்றி குமுதம்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version