2025 புத்தாண்டு கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் பங்கெடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்.
ஜனவரி 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும். அடுத்தடுத்து 10 நாட்கள் பொங்கல் விடுமுறை. முந்தைய படங்களின் வசூல் சாதனையை விடாமுயற்சி விட்டு விளாசும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.
மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகமும் விடாமுயற்சியின் ரிலீஸ் எதிர்நோக்கி காத்திருந்தது. இந்த வருடத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை என்பது கிடைக்காத ஒரு விஷயம்.
அப்படியே லட்டு போல கிடைத்திருக்கும் இந்த ரிலீஸ் தேதியை விட்டுவிட்டு படத்தின் ரிலீஸை லைக்கா நிறுவனம் ஒத்தி வைக்க என்ன காரணம்..? என்று விசாரித்த போது காத்து வாக்கில் நமக்கு ஒரு தகவல் தான் இது.
படத்தில் ரிலீஸ் நெருங்கிவிட்ட நிலையில், படத்திற்காக பணியாற்றிய கிராபிக்ஸ் குழு பேசிய தொகையை விட அதிக தொகையை கேட்பதாகவும்.. படக்குழு கூறிய நேரத்தை விட அதிக நேரம் இந்த படத்தில் உழைக்க வேண்டி இருந்தது.. என்ற காரணத்தினாலும் இந்த டிமாண்ட்டை கிராபிக்ஸ் குழு வைக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
விடாமுயற்சி படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய படம். ஆனால், சில பொருளாதார பிரச்சினைகளில் சிக்கிய லைக்கா நிறுவனம் இந்த படத்தின் வேலையை கிடப்பில் போட்டது. இதனால் கிராபிக்ஸ் குழுவுக்கும் கணிசமான செலவு அதிகரித்து இருக்கிறது.
எனவே, பேசிய தொகையை விட அதிக தொகை கொடுத்தால் தான் படத்தின் காட்சிகளை ஒப்படைக்க முடியும் என கிராபிக்ஸ் டிமாண்ட் செய்யவே.. அதனை கொடுக்க மறுத்துள்ளது லைகா நிறுவனம்.
எனவே படத்தின் வெளியீட்டை தள்ளிப் போடுவது தான் ஒரே வழி என்று திடீரென புத்தாண்டு என்று கூட பார்க்காமல் அஜித் ரசிகர்களின் நெஞ்சில் இடியை இறக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறது லைக்கா.
ஆனால், கிராபிக்ஸ் நிறுவனம் மட்டுமில்லாமல் போஸ்ட் ப்ரொடக்ஷன் குழுவும் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள். உண்மையான காரணம் என்ன..? என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தோ, அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் படம் வெளியீட்டை வைத்துக்கொண்டு திடீரென படத்தின் ரிலீஸை தள்ளி வைத்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கூடிய சீக்கிரம் இந்த பிரச்சனைகளை முடித்துவிட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் தயாரிப்பு குழு இறங்க வேண்டும் என்றும் இது போல பத்து நாள் தொடர்ச்சியாக விடுமுறை வரக்கூடிய காலம் இந்த வருடம் முழுவதும் கிடையாது. 10-ம் தேதி படம் வெளியானால் 20-ம் தேதி வரை வசூல் அள்ளும் வாய்ப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு உள்ளது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.