குழப்பத்தில் சிக்கிய குட் பேட் அக்லி.. வலிமை கதையா ஆயிடும் போலயே..!

தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு மட்டும் தமிழ் சினிமாவில் படம் ரிலீஸ் ஆவது என்பது பிரச்சனை ஆகிக்கொண்டே இருக்கிறது.

வலிமை திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. எந்த ஒரு அஜித்தின் படத்தையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிடவே முடியவில்லை. தற்சமயம் ஏற்கனவே இதேபோல சிக்கலில் சிக்கியிருக்கிறது விடாமுயற்சி திரைப்படம்.

குழப்பத்தில் சிக்கிய குட் பேட் அக்லி

இரண்டு வருடங்களுக்கு முன்பே விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் துவங்கியது. ஆனால் இன்னமும் அந்த திரைப்படம் திரைக்கு வரவில்லை அதற்குப் பிறகு ஆரம்பித்த வேட்டையன் திரைப்படம் முடிந்து தற்சமயம் திரையில் வெளியாகி இருக்கிறது.

விடாமுயற்சி குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த எதிர்பார்ப்புமே குறைந்துவிட்டது இந்நிலையில் அந்த படத்தை குறித்து கவலைப்படாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்று விட்டார் நடிகர் அஜித்.

தாமதத்திற்கு காரணம்:

இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரமாக நடிப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் கூறும்பொழுது மூன்று வேடங்களில் அஜித் நடிக்கிறார் என்று கூறுகின்றனர். இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இதனால் இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல அஜித்துக்கு நிறைய காமெடி காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி வராவிட்டாலும் பரவாயில்லை.

வலிமை கதையா ஆயிடும் போல:

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது என்பது மக்கள் மத்தியில் சமாதானத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் தற்சமயம் இந்த திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் படப்பிடிப்புகளில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது என்று படப்பிடிப்பு குழுவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதனால் பொங்கலுக்கு விடாமுயற்சியை வெளியிடுவதற்கான வேலையை செய்யலாம் என்று யோசித்து வருகிறது லைக்கா நிறுவனம். ஏற்கனவே லைக்கா நிறுவனம் இயக்கிய திரைப்படங்களில் மற்ற பெரிய படங்கள் எல்லாமே வெளியாகிவிட்டன விடாமுயற்சி திரைப்படம் மட்டும்தான் இன்னமும் திரைக்கு வராமல் இருக்கிறது. எனவே பொங்களுக்கு விடாமுயற்சியை வெளியிடுவதற்கான வேலைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version