ரேஸ்சுல எது முதல்ல.. விடா முயற்சியா? குட் பேட் அக்லியா? – தல பட New அப்டேட்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தல அஜித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன் சொந்த முயற்சியால் சினிமா சம்பந்தப்பட்ட பின்புலம் இல்லாமல் இந்த அளவு தன்னுடைய கடுமையான உழைப்பால் முன்னேறியவர்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமலை போல இன்றைய காலகட்டத்தில் தல மற்றும் தளபதி என்றாலே ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பும் கிரேசும் உள்ளது. அந்த வகையில் இவர்களது படங்களை விரும்பிப் பார்க்கின்ற ரசிகர்களின் வட்டாரம் பற்றி சொல்லத் தேவையில்லை.

ரேஸ்ல எது முதல்ல..

இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ மற்றும் கோட் திரைப்படங்கள் அவர்களது ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் குறித்து இது வரை எந்தவிதமான அப்டேட்டுகளும் வெளியாகவில்லை.

இதனை அடுத்து தல ரசிகர்கள் அஜித்தின் இரண்டு படத்தில் எந்த படம் முதலில் வரும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பதிவில் முதலில் எந்த படம் வெளிவரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன்பு தற்போது அஜித் பற்றி இணையங்களில் எப்படிப்பட்ட பேச்சை ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் பார்ப்போம். சமீபகாலமாக அஜித் திரை உலகில் சரியான ஃபார்மில் இல்லை அவருக்கு சினிமாவில் இன்ட்ரெஸ்ட் போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.

எனினும் உண்மை நிலை என்ன என்று ஆய்ந்து பார்க்கும் போது அஜித்தின் பலம் தெரியாமல் பலரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திலும் யார் சூப்பர் ஸ்டார் இவர்தான் அடுத்த தளபதி என்பது போன்ற பேச்சுக்கள் எழுவது இயற்கையான ஒன்று தான். அது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டத்தில் படு மாசான வெற்றிகள் கிடைக்கும் ‌.

அந்த வரிசையில் சியான் விக்ரம், சூர்யா தற்போது எஸ் கே என பலரது பெயர்கள் டாப் லிஸ்டில் இடம் பிடித்தது வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

விடா முயற்சியா? குட் பேட் அக்லியா? – தல பட அப்டேட்..

பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் ஆக இருக்கும் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்டுக்கள் அதிகளவு வராததற்கான காரணம் படத்தின் கதை அந்த அளவு இருப்பதால் தான். இதனால் தான் ரோடு சைடில் இருப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் பிரேக் டவுன் படத்தை பொருத்தவரை ரோடுகளில் நடக்கும் விஷயங்களை தான் அதிக அளவு கூறி இருக்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக உள்ளது. இந்நிலையில் முதலில் வெளிவரக்கூடிய படத்தின் அப்டேட் என்ன தெரியுமா.

முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் தான் வெளிவரும் இதனை அடுத்த தான் விடாமுயற்சி வெளிவரும் என்ற பேச்சுக்கள் புகைகிறது. எனினும் தற்போது தெரிய வந்திருக்கும் செய்தி படி விடாமுயற்சி தான் முதலில் வெளிவரும்.

இதனை அடுத்து தான் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரும். விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் தேதியிலிருந்து அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்களான ஏப்ரல், மே மாதத்திலும் வெளி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு இரண்டு படங்களில் இவர் வேலை செய்து கொண்டிருப்பது மிக சிறப்பான விஷயமாக ரசிகர்களால் பேசப்பட்டு வரும் வேளையில் விடாமுயற்சி தான் முதலில் வெளிவரும் என்ற அப்டேட் ஆனது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam