வந்தது “விடாமுயற்சி” ரிலீஸ் தேதி..! AK ரசிகர்களுக்கு B2B TREAT..!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்களை கொண்டாட்டத்தில் இருக்கிறது சமீபத்தில் நடிகர் விஜய் துபாயில் நடைபெற்ற துபாய் 24H என்ற கார் பந்தய போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார் நடிகர் அஜித்குமார்.

இது நடிகர் அஜித் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அங்கே தனக்கென தனி முத்திரை பதிக்கிறார் அஜித்குமார் என்று சக சினிமா பிரபலங்கள பலரும் நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்களையும் புகழாரங்களையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. அதன்படி ஜனவரி 27ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரப்பூர தகவல்கள் விளைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாளை விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனுடைய அறிவிப்பு வெளியானால் கண்டிப்பாக ஜனவரி 27ஆம் தேதி திரைப்படம் வெளியாகிவிடும் என்று ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.

அதே சமயம் ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருக்கிறது. ஆக மொத்தம் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு இந்த 2025 Back 2 Back ட்ரீட் தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!