Site icon Tamizhakam

விடுதலை 2.. மவுசு எப்படி இருக்கு..? முதல் கலெக்ஷன் இவ்வளவு தான்..!

The buzz around “Viduthalai 2” is real, and we’ve got the scoop on its first-day collection.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விடுதலை பாகம் 2.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகியுள்ளது.

படத்தினை பார்த்து ரசிகர்கள் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெற்றிமாறனின் இயக்கத்திற்கான இருக்கும் ரசிகர் பட்டாளமும் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் ரசிகர் பட்டாளமும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. விடுதலை படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரி கதாபாத்திரமான குமரேசன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுதான் முழு படமும் நகர்ந்தது.

ஆனால், விடுதலை இரண்டாம் பாகத்தில் முழுக்க முழுக்க நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நடைபெற்றது.

குறிப்பாக மஞ்சு வாரியரின் தோற்றமும் விஜய் சேதுபதியின் தோற்றமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

படம் முதல் நாளில் உலகம் முழுதும் 8 கோடிகள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பு பெற்ற படம் என்பதால் அடுத்தடுத்து நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Summary in English : So, the buzz is real! “Viduthalai 2” has hit the theaters, and fans are super excited to see how it’s performing at the box office. On its opening day, the movie raked in some impressive numbers, making quite a splash among audiences and critics alike.

Exit mobile version