Director Vignesh Shivan recently expressed his feelings of shame regarding the salary of Mejor Mukunth Varatharajan after viewing the film “Amaran.”
அமரன் திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது.
பல்வேறு சினிமா முன்னணி பிரபலங்கள் பட குழுவினரை சந்தித்து தங்களுடைய பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இல்லத்திற்கு அமரன் பட குழுவினரை அழைத்து அவர்களுக்கு பாராட்டுகளை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் அமரன் படம் பார்த்த பிறகு அவமானமாக இருக்கிறது கேவலமாக இருக்கிறது என்று தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, படத்தில் கதாநாயகராக வரக்கூடிய மேஜர் முகுந்த் வரதராஜன் தன்னுடைய பெற்றோருக்கு ஒரு வீடு வாங்க ஆசைப்படுகிறார்.
ஆனால் அவர் வீடு வாங்க தேர்வு செய்த இடம் சென்னையில் இருந்து மிக தொலைவில் ரூபி பில்டர்ஸ் நிறுவனம் மூலமாகத்தான் வாங்க முடிகிறது.
மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு எவ்வளவு இஎம்ஐ கட்ட முடியுமோ..? அந்த அளவுக்கு தான் அவரால் ஒரு வீட்டை வாங்க முடிகிறது.
இது எவ்வளவு பெரிய அவமானம்.. எவ்வளவு பெரிய கேவலம்.. ராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய சம்பளம் 100 மடங்கு உயரும் அளவுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு அவமானமாக இருந்தது. வெறும் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக பணியாற்றக்கூடிய ஒருவர் எந்த அளவு தன்னுடைய நாட்டு மக்களுக்காக பணியாற்றி இருக்கிறார் என்று நினைத்து பெருமையாக இருக்கிறது என என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Summary in English : In a recent interview, Director Vignesh Shivan expressed his feelings of shame regarding the salary of Mejor Mukunth Varatharan after watching the film “Amaran.” Shivan highlighted the stark contrast between Varatharan’s compensation and the immense talent and dedication he displayed in his performance.