சமீபத்தில் நடிகை நயன்தாராவின் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனமான ஃபெமி நைன் என்ற நிறுவனத்தின் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு களேபரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் உமாபதி அவர்கள் தனக்கு தெரிந்த சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். அவர் கூறியதாவது: விக்னேஷ் சிவன் ஒரு பால் டப்பா. அவருக்கு நயன்தாராவை பாதுகாக்கவும் தெரியவில்லை, வழி நடத்தவும் தெரியவில்லை.
ஒரு சொதப்பு சொதப்பி வைத்திருக்கிறார். இதனால் எல்லோரும் நயன்தாராவை போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாக அந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், நடிகை நயன்தாரா அங்கே வந்தது மதியம் மூன்று மணிக்கு.
இந்த நிகழ்ச்சிக்காக சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய இன்ஃப்ளூன்சர்களை அழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக விருந்தும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடிய நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
காலை 7 மணி முதலே நிகழ்ச்சி நடக்க இருந்த மண்டபத்தில் கூட்டம் குவிய தொடங்கி விட்டது. 9 மணிக்கு வர வேண்டிய நயன்தாரா இப்போது வந்து விடுவார் அப்போது வந்து விடுவார் என அங்கு இருந்த பலரும் இருந்த இடத்தை விட்டு இருந்திருக்காமல் மதியம் சாப்பிட கூட செல்லாமல், இயற்கை உபாதை கழிக்க செல்லாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார்கள்.
ஒரு வேளை.. சாப்பிடுவதற்காகவோ, இயற்கை உபாதை கழிப்பதற்காகவோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் அந்த இடத்தில் வேறு ஒருவர் வந்து அமர்ந்து விடுவார். வேறு வழியில்லாமல் ஆறு மணி நேரமாக நடிகை நயன்தாரா வந்து விடுவார் வந்துவிடுவார் என நம்பி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா மூன்று மணிக்கு வந்திருக்கிறார். வந்த பிறகு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அரங்கேறிய கூத்துகள் தான் இங்கே விஷயம். இதற்கு முன்பு என்ன நடந்தது என்று விசாரித்த போது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் காலை 9 மணிக்கு என்று நிகழ்ச்சி என்று நயன்தாராவிடம் கூறாமல் அவருடைய கணவர் விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார்.
ஆனால், விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இதை கூறவில்லை. அவர்கள் மதுரைக்கு வந்தாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அவர்கள் தூங்கி எழுந்ததே காலை 11 மணிக்கு மேல் தான். மட்டுமில்லாமல் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இப்படி அப்படி என மதுரையில் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் ஹோட்டல் அறையிலேயே மூன்று மணி வரை நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
நியாயமாக 9 மணிக்கு நிகழ்ச்சி என்றிருக்கும் போது காலை 5 அல்லது 6 மணிக்கு எழுந்து அவர்கள் 8:30 மணிக்கு தயாராகி நிகழ்ச்சிக்கு சென்று இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பேர் இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் இங்கே மெதுவாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்த சமூக அவர்களால் அழைக்கப்பட்டு இருந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூன்சர்கள் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்பட்டிருக்கின்றனர்.
காலதாமதம் ஆவதன் காரணமாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கிருந்து புறப்பட தயாராக இருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர், இங்கு வந்திருக்கக்கூடிய சமூக வலைதள பிரபலங்களை உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தான் அழைத்து வந்தோம் இது உங்களுக்கும் தெரியும். கடைசியில் கிளம்புகிறேன் என்று கூறுகிறீர்களே..? என அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் கேட்டிருக்கிறார்.
இப்படி சமூக வலைதள பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்ற விஷயத்தையும் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் கூறவில்லை. இது தெரியாமல் நயன்தாரா இருந்து கிளம்புவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.
நயன்தாரா கிளம்புகிறாரே அப்போ.. அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாதா..? என ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஏனென்றால், சாங்கியதற்கு ஒரு 10 பேர் 20 பேருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். நம்மால் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று முண்டியடித்து கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதனால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அங்கு வந்தவர்களை அசிங்கப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன். சமூகவலை பிரபலங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்த போது உங்களுக்கு என்னப்பா.. எங்க கூட போட்டோ எடுத்துக்கணும் அவ்வளவு தானே.. என்று அவர்களை பார்த்து நக்கலாக பேசி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இதுவும் அங்கு குடியிருந்த சமூக வலைதள பிரபலங்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. காலையிலிருந்து சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மனுஷங்களை பற்றி எதுவும் கவலைப்படாமல் இவர்கள் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து சீக்கிரம் கிளம்பி செல்ல முயற்சி செய்து பெரிய பிரச்சனை கிளம்பி இருக்கிறார்கள் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.