தமிழ் சினிமா ஹீரோக்களை பொருத்த வரை ஆரம்பத்தில் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு தொப்பை விழுந்து, கன்னங்கள் உப்பிய நிலையில் உடல் பருமனாகி விடுவர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுவர்.
அதற்கு உதாரணமாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் அதே போன்றே இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அஜீத்குமார், வடிவேலு, பிரபு போன்றவர்கள் உடல் பருமனாக காணப்படுகின்றனர். கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றவர்கள் தேவைப்பட்டால் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடுகின்றனர்.
ஆனால் கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த நடிகர் விஜய்க்கு வயது 49 ஆகிறது. வரும் ஜூன் 22ல் அரைசதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஆரம்ப கட்டத்தில் படங்களில் நடித்த போது என்ன உடல்வாகுடன் இருந்தாரோ அதே போல்தான் இப்போதும் இருக்கிறார். தலைமுடி, தாடி, மீசையில் வெள்ளை நிறம் வந்தாலும் உடலில் அதே இளமைையான தோற்றத்தையே காட்டுகிறார்.
இரவு 7 மணிக்குள் டின்னரை முடித்துவிடும் நடிகர் விஜய், அதற்கு பிறகு 10 மணி வரை விழித்திருந்தாலும் திரவமாக டீ, காபி, பால், ஜூஸ், சூப் போன்றவை மட்டுமே சாப்பிடுவார். இந்த பழக்கமே அவரது உடல் அதே தோற்றத்தில் இருக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்காக, டீஏஜிங் செய்துள்ளதால், சிவகார்த்திகேயனுக்கு தம்பி போன்ற மிக இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார் விஜய், சமீபத்தில் காரில் இறங்கி நடந்து செல்லும் அவரது தோற்றத்தை பார்த்து, காலேஜ்ல படிக்கற பையன் மாதிரி தளபதி இருக்காரேபா என ரசிகர்கள் அசந்து போய்விட்டனர்.