விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அரசியல் களம் என்பது சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து விஜய் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் ஏற்கனவே சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை அளித்து வருகிறது. முக்கியமாக திரையரங்கு முதலாளிகள் பலரும் இதனால் வருத்தப்பட்டு வருகின்றனர். ஏனெனில் விஜய் படம் வெளியாகும் பொழுது முதல் ஒரு வாரத்தில் திரையரங்குகளுக்கு நல்ல வசூல் கிடைக்கிறது.
பெரிய வேலையா பாத்துட்டான்
ஆனால் தற்சமயம் விஜய் சினிமாவை விட்டு போவதால் அப்படியான வசூலை கொடுக்கும் இன்னொரு நடிகர்கள் இல்லை என்பதால் அவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சினிமாவிலும் இதனால் போட்டி அதிகரித்துள்ளது.
இப்பொழுது விஜய்யின் இடத்தை யார் பிடிக்க போகிறார் என்கிற கேள்விகள் ஒரு பக்கம் இருந்து வருகிறது. பெரும்பான்மையாக சிவகார்த்திகேயன்தான் விஜய்யின் இடத்தை பிடிப்பார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே விஜய் தற்சமயம் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் பேனரில் ரசிகர் செய்த சம்பவம்
இந்த திரைப்படத்தில் வரும் போலீசாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கு நடுவே தனது கட்சி தொடர்பான வேலைகளையும் விஜய் கவனித்து வருகிறார். அப்படியாக தற்சமயம் விஜய் தன்னுடைய கட்சி மாநாடு தொடர்பான வேலைகளில் அதிக ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார்.
ஏனெனில் இந்த கட்சி மாநாட்டை ஒழுங்காக நடத்துவதன் மூலம்தான் தன்னை ஒரு அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்கிற நிலையில் விஜய் இருந்து வருகிறார். எனவே அதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
சோலி முடிஞ்ச்
இதனை தொடர்ந்து ரசிகர்களும் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் பல இடங்களில் இதற்காக போஸ்டர்களையும் பேனர்களையும் அமைத்து வருகின்றனர். அப்படியாக புதுச்சேரியில் பேனர் ஒன்றை அமைத்த ரசிகர் அதில் புதுச்சேரி முதலமைச்சரின் புகைப்படத்தையும் வைத்து புதிய பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்.
இதனால் புதுச்சேரி முதலமைச்சர் ஆதரவு விஜய்க்கு இருக்கிறதா? என்கிற கேள்வி தற்சமயம் எழ துவங்கி இருக்கிறது இதனை அடுத்து இது அதிக சர்ச்சையை கிளப்பி வருகிறது.