அட..ச்சீ இப்படியா பதில் சொல்லுவாங்க? விஜய் அப்பாவால் வெடித்த பிரச்சனை..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிப்பில் அண்மையில் கோர்ட் திரைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் அள்ளி தந்தது.

இதைத்தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களம் இறங்கக்கூடிய தளபதி விஜய் அதற்கான ஆயத்த பணிகளை படு வேகமாக செய்து வருவதோடு விரைவில் தனது கட்சி மாநாட்டை நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

அட..ச்சீ இப்படியா பதில் சொல்லுவாங்க?

இந்நிலையில் தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியானது வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கூடிய சூழலில் அதற்கு உரிய பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் மேற்கொண்டு வருகின்ற வேலையில் இளைஞர்கள் பலரும் இணைந்த கட்சிக்கு பெருத்த ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரை ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக இது மாறி எதிர்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக கூடிய வாய்ப்பு கேப்டனுக்கு பிறகு விஜய்க்கு உள்ளது என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

மேலும் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு இடையே சில காலமாக கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சமீபத்தில் இந்த பிரச்சனைகள் ஓய்ந்திருந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

விஜய் அப்பாவால் வெடித்த பிரச்சனை..

அதுமட்டுமல்லாமல் இவர் தனது மகனின் கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதோடு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன் மகனுக்கு பக்க பலமாக மாறி இருப்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அப்பா மகனுக்கு இடையே மற்றொரு பிரச்சனை முளைத்து விட்டதாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது அதோடு அதுவே இணையத்தில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இதற்கு காரணம் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தளபதி விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரனிடம் விஜய் கட்சியின் முதல் மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் பதில் அளித்த விதத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநாடு படத்தை எடுத்தவர் வெங்கட் பிரபு. எனவே அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தமாஷாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நழுவி விட்டார்.

இதைத்தொடர்ந்து இவர் இப்படி பதில் அளித்ததன் காரணம் என்ன என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொள்ளும் ரசிகர் வட்டாரம் மீண்டும் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு விட்டதா? அதனால் தான் எப்படி பதிலளித்தாரா? என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam