நடிகர் விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வருகிறார். அதே சமயம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதற்கு முன்பு பெரிய நடிகராக இருந்தவர் நடிகர் ரஜினி. இதனாலேயே நடிகர் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே சண்டைகள் இருந்து வருவதாக எப்பொழுதுமே பேச்சுக்கள் உண்டு.
அதற்கு தகுந்தார் போல விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுதும் அதை ரஜினி ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
திகில் கொடுக்கும் தளபதி ரசிகர்கள்
அதேபோல ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும் பொழுது அதை விஜய் ரசிகர்கள் கேலி கிண்டல் செய்கின்றனர். இது ரஜினி கூறிய காக்கா கழுகு கதை ஒன்றிலிருந்து துவங்கியது. இந்த காக்கா கழுகு கதைக்கும் முன்பு ஒரு விஷயம் நடந்தது.
அதாவது ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்க துவங்கினார். இந்த நிலையிலிருந்துதான் இந்த பிரச்சனை துவங்கியது. விஜய் அதிக சம்பளம் வாங்கிய பிறகு ஒரு ஜெயிலர் படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி ஒரு காக்கா கழுகு கதையை கூறினார்.
அப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்
அதில் அவர் காகா என்று விஜயைதான் கூறுகிறார் என்று பேச்சுக்கள் எழ துவக்கின. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ரஜினியை விமர்சிக்க துவங்கினார்கள். இதற்குப் பிறகுதான் இந்த பிரச்சனை வெடித்தது.
இந்த பிரச்சனை அதிகரிக்க துவங்கிய பிறகு இதனை பார்த்த ரஜினி பிறகு அவரே ஒரு விழாவில் பேசும் பொழுது விஜய் எனக்கு எதிரி எல்லாம் கிடையாது என்று பேசி இருந்தார். இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்சனை ஓயவில்லை.
வருத்தத்தில் விஜய்
இந்த நிலையில் தற்சமயம் ரஜினி நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. வேட்டையன் திரைப்படம் லைக்கா நிறுவனத்திற்கு மிக முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் இதற்கு முன்பு லைக்கா இயக்கிய லால் சலாம் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.
வேட்டையன் திரைப்படம் கொடுக்கும் வெற்றியை வைத்துதான் லைக்கா அடுத்து நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து இப்படி அவதூறுகளை பரப்புவது படத்தின் வசூலில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று லைகா பயப்படுகிறது. இதனை அறிந்த நடிகர் விஜய்யும் இது குறித்து மிகவும் கவலை அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் முக்கியமாக அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.