நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி பீனிக்ஸ் வீழான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார் என்றாலும் பீட்சா படத்திற்கு பிறகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி.
திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் என பல்வேறு தளங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்நிலையில், இவருடைய மகனின் சினிமா வருகை ரசிகர்களை மகிழ்ச்சியை ஆழ்த்தியது. ஆனால் சூர்யா விஜய் சேதுபதி பேசக்கூடிய பேச்சுக்கள் ரசிகர்களை ஒரு விதமான நெருகளுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று தான் பார்க்க முடிகிறது.
ஏனென்றால் சினிமாவில் அறிமுகமான பிறகு சூர்யா சேதுபதி பேசிய முதல் பேச்சு என்னவென்றால் என்னுடைய அப்பா வேற நான் வேற என்னுடைய பெயரை இந்த படத்தின் போஸ்டரில் பாருங்கள் சூர்யா என்று தான் போட்டு இருக்கும் தவிர சூர்யா விஜய் சேதுபதி என போட்டு இருக்காது என்று ஏக வசனம் பேசினார்.
உண்மை என்னவென்றால்..? விஜய் சேதுபதியின் மகன் என்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அவருடைய மகன் சூர்யாவிற்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் 100 சதவீதம் உண்மை.
தன்னுடைய தந்தை ஒரு பிரபல நடிகராக இருப்பதால்தான் எனக்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்னுடைய தந்தையின் பெயரை காப்பாற்றவும் ரசிகர்களை மகிழ்விக்கவும் தயாராக இருக்கிறேன் என் அப்பாவை ஏற்றுக் கொண்டது போல என்னையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என சூர்யா பேசி இருந்தால் அந்த விஷயத்தை ரசிகர்கள் விமர்சித்திருக்க மாட்டார்கள்.
எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர் பட வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தில் கால் கடுக்க நின்று கொண்டு கிடைக்கக்கூடிய சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து கொண்டு ஒரு நாளைக்கு 300 ரூபாய் 500 ரூபாய் என தங்களுடைய காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நிலையில்..
திடீரென ஹீரோ வாய்ப்பு பெற்றதும் எனக்கும் அப்பாவுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் தான் எல்லாம் என்று சூரியா மமதையுடன் பேசியதை ரசிகர்கள் விரும்பவில்லை.
இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் என் அப்பா ஒரு நாளைக்கு பாக்கெட் மணியாக 500 ரூபாய் தான் கொடுப்பார். இதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த கஷ்டத்தின் காரணமாகத்தான் நான் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் நானும் கஷ்டப்பட்டு தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன் என்பது போல பேசி இருந்தார் சூர்யா விஜய் சேதுபதி.
இவருடைய பேச்சால் ஏற்கனவே கடுப்பாகி இருந்த இணையவாசிகள் மற்றும் சினிமா ரசிகர்கள் இவருடைய இந்த 500 ரூபாய் பாக்கெட் மணி விவகாரத்தை கேட்டதும் இன்னும் கடுப்பாகிவிட்டார்கள்.
இங்கே ஒரு நாளைக்கு எங்களுடைய நாள் சம்பளமே ஐநூறு ரூபாய் தான். அதை கொண்டு எங்க குடும்பத்தை நகர்த்தி கொண்டிருக்கிறோம். ஆனால் 500 ரூபாயை வெறும் பாக்கெட் மணியாக வாங்கி செலவு செய்து விட்டு கஷ்டப்பட்டேன் என்றெல்லாம் கூறுகிறீர்களே..? என்று சூர்யா விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், தன்னுடைய மகனை அழைத்து நடிகர் விஜய் சேதுபதி உனக்கு எல்லாம் அறிவுன்னு இருக்கா..? என்ன பேசணும்.. என்ன பேசக்கூடாது என தெரியாதா..? என பயங்கரமாக திட்டிதாக ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி தன்னுடைய மகன் சூர்யாவை திட்டினாரோ இல்லையோ அது இரண்டாவது விஷயம். ஆனால், ஊடகங்களில் பேசும்போது பார்க்கக்கூடிய ரசிகர்கள் விரும்பும் விதமாக அல்லது வெறுக்காத விதமாக பேசினால் ஒரு நடிகராக சூர்யா திரைத் துறையில் ஜொலிக்க முடியும். அல்லது, இப்போது பேசுவது போலவே இன்னும் ஒரு நான்கு ஐந்து இடங்களில் பேசினால்.. பழையபடி அவர் அப்பா கொடுக்கக்கூடிய 500 ரூபாய் பாக்கெட் மணியை வாங்கிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியது தான் என கூறுகிறார்கள் இணையவாசிகள்.
இவருடைய இந்த போக்கு குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Summary in English There’s been quite a buzz lately about Vijay Sethupathi and his not-so-subtle words towards his son Suriya. If you’ve caught any of Suriya’s recent interviews, you might have noticed him talking a big game about his attitude and approach to life. Well, it seems like Vijay decided it was time to step in and give him a reality check!