In a recent chat, actor Vijay Sethupathi spilled some exciting details about film “Viduthalai Part 1.” He revealed that director Vetri Maran took the interval scene and really expanded it into the climax.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தின் பிரமோஷனுகாக படக்குழுவினர் பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம் விடுதலை படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது பேசிய அவர் முதல் பாகத்தில் சூரி என்னை கைது செய்வார். அந்த காட்சியை எளிமையாக எடுக்க திட்டமிட்டு இருந்தோம். சாதாரணமாக சூரி என்னை சந்திக்க வருவார். கைது செய்து அழைத்து சென்று விடுவார். இப்படித்தான் காட்சி இருந்தது என கூறினார்.
கடுப்பான விஜய் சேதுபதி
அப்போது குறிப்பிட்ட தொகுப்பாளினி, பார்த்த கதையை தானே கூறுகிறீர்கள்..? என்று கேட்டார். இதனால் குழம்பிப்போன விஜய் சேதுபதி நான் விடுதலை படத்தின் முதல் பாகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு புரிகிறதா..? இல்லையா..? என்று கடுப்பான முகத்துடன் கேள்வி எழுப்பினார்.
அதனை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, முதல் பாகத்தில் சூரி என்னை எளிமையாக கைது செய்து அழைத்துச் செல்வது போலத்தான் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கிளைமாக்ஸாக மாறிய இடைவேளை காட்சி..
முதல் பாகத்தின் இடைவேளையின் போது சூரி என்னை கைது செய்வது போன்ற காட்சி இருந்தது. இதை இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டு மாற்றினார்.
என்னை கைது செய்யக்கூடிய காட்சியை கிளைமாக்ஸ் காட்சியாக முடிவு செய்து வைத்திருக்கிறேன்.. அதனை எளிமையாக இல்லாமல் இன்னும் பெரிதாகவும்.. நடிகர் சூரியை ஒரு ஹீரோவாக முன்னிறுத்துவதற்கு ஏதுவாகவும் காட்சிகளை வைத்து படமாக்கலாம் என்று கூறினார்.
எனக்கும் அது சரி என்று பட்டது. எனவே, விடுதலை படத்தின் இடைவேளை காட்சியை முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக மாற்றி விட்டார்.
அந்த காட்சியில் ஒரு பெரிய போலீஸ் படையே திரண்டு வந்து.. ஊர் முழுக்க என்னை துரத்தி பிடிக்க முயற்சி செய்வது போலவும்.. அவர்களிடம் இருந்து தப்பித்து விடும் நான்.. சூரியிடம் அகப்பட்டுக் கொள்வது போலவும் காட்சி படமாக்கப்பட்டது என பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Summary in English : In a recent chat, actor Vijay Sethupathi opened up about his collaboration with director Vetri Maran in the much-anticipated movie “Viduthalai Part 1.” He revealed an interesting tidbit: Vetri decided to expand the interval scene into what turns out to be a gripping climax! How cool is that?