ரஞ்சித்தை நொறுக்கிய விஜய் சேதுபதி..? மூஞ்சியில் அடிச்ச மாதிரி இப்படியா பண்ணுவாங்க..! முகம் சுழிக்க வைத்த பேச்சு..!

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி நேற்று அக்டோபர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

இதில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட அனைவரிடமும் ஒரு விதமான டிக்டேட்டர் மனநிலையுடன் தான் பேசினார் என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் போட்டியாளர்களிடம் கண்டிப்பாக இருப்பது அவசியம் தான். ஆனால், இப்படி முதல் நாளே அவர்களை உடைத்து விடும் அளவுக்கு விஜய் சேதுபதி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்தையும் பார்க்க முடிகிறது.

இதற்கு என்ன காரணம்..? என்றால் நடிகர் ரஞ்சித்தை போட்டியாளராக அறிமுகப்படுத்திய போது, அவரிடம் சமீபத்தில் அவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் குறித்தும் அவர் இயக்கிய பழைய திரைப்படங்கள் நடித்த பழைய திரைப்படங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு பேசினார்.

பழைய திரைப்படங்களில் அன்பான ஒரு நல்ல நண்பன் போல நல்ல நடிகராக நான் உங்களை பார்த்தேன். ஆனால் கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் அதற்கு அப்படியே எதிராக இருந்தீர்கள். ஏன் இந்த மாற்றம்..? உண்மையான ரஞ்சித் யார்..? கவுண்டம்பாளையம் படத்தில் வரக்கூடிய நபரா ரஞ்சித்..? அல்லது, நாங்கள் சிறுவயதில் பார்த்த வளர்ந்த அன்பான நபரா ரஞ்சித்..? எது உண்மையான ரஞ்சித்..? என்று கேள்வி எழுப்பினார்.

இதுக்கு பதில் அளித்த ரஞ்சித் சிறுவயதில் நீங்கள் பார்த்த அன்பான மனிதன்தான் ரஞ்சித் என்று பேசினார். அதனைத் தொடர்ந்து ரஞ்சித்தின் நண்பர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார் என அறிமுகப்படுத்தினார் அவர் விஜய் சேதுபதி இடம் பேசும்போது.. வணக்கம் சார் சாப்டீங்களா..? என்றும்.. பேச ஆரம்பித்ததும் முதலில் இதை கேட்போம் என்றும் கூறினார்.

அதற்கு சாப்பிட்டேன் என கூறிய நடிகர் விஜய் சேதுபதி உடனே மூஞ்சில அடித்தார் போல இது எல்லா ஊரிலும் கேட்பதுதான்.. எங்க ஊரில் வந்தால் மட்டும் சாப்பிட வேண்டாம் வெளியே போங்க என்று சொல்லுவோமா..? என்று மூஞ்சியில் அடித்தார் போல பேசினார்.

விஜய் சேதுபதி இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் முதல் நாளே இப்படி போட்டியாளர்களையும் போட்டியாளர்களுடைய உறவினர்கள், நண்பர்களையும் மூக்கு உடைப்பது போல மூஞ்சியில் அடித்தார் போல பேசி இருப்ப பேசியதை தவிர்த்து இருக்கலாம் என்று கூறும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த நடவடிக்கை குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை பதிவு செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version