GOAT அப்டேட் கேட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்… வெங்கட்பிரபு கொடுத்த செருப்படி பதில்..

GOAT அப்டேட் கேட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர்… வெங்கட்பிரபு கொடுத்த செருப்படி பதில்..

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ரம்யாகிருஷ்ணன், கனிகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீஷ், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல் என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.

GOAT படத்தில்…

GOAT படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின், நடிகர் மைக் மோகன் நடிக்கிறார். அதுவும் வில்லன் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல் நடிகர் பிரசாந்த், 10 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி இந்த படம் மூலம் தருகிறார்.

அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கும் விஜய்க்கு சினேகா அப்பா விஜய்க்கும், மீனாட்சி செளத்ரி மகன் விஜய்க்கும் ஜோடியாக நடிக்கின்றனர்.

டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்டதாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இளமையாக காட்டுவதற்காக விஜய், பிரசாந்த் உள்ளிட்ட பலருக்கும் டீ ஏஜிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் படப்பிடிப்பு

GOAT படத்தின் 90 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இன்னும் 10 சதவீித படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது, கிளைமேக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளை எடுக்க படக்குழு ரஷ்யா செல்கிறது. அங்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்.. 16 வயதில் என் அப்பாவே இதை பண்ணார்.. குண்டை தூக்கி போட்ட குஷ்பூ..

படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் மற்றும் டைரக்டர் கங்கை அமரன் மகன். முதலில் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி போன்ற சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு, சென்னை 28 படத்துக்கு பிறகு டைரக்டராக மாறினார்.

அடுத்து சரோஜா, கோவா, சென்னை 28 படத்தின் 2ம் பாகம், மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கி, முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார். இப்போது டாப் ஸ்டாரான விஜய் படத்தை இயக்கி வருகிறார்.

ரசிகர்களுக்கு பதில்

இந்நிலையில் வெங்கட்பிரபு வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அவ்வப்போது தனது படங்கள் குறித்த அப்டேட்களை செய்வார். ரசிகர்களுக்கும் பதில் தருவார்.

கடந்த நான்கு மாதங்களாக GOAT படம் ஷூட்டிங் துவங்கியது முதல் GOAT படத்தின் அப்டேட் குறித்து அடிக்கடி ரசிகர்கள் கேட்பது வழக்கம். அப்படி GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கள் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு, விரைவில் வெளியாகும் என கடந்த வாரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கட்பிரபு பதில் தந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “என்னோட ஆடைக்குள் கையை விட்டு அந்த உறுப்பை..” மோசமான அனுபவம் குறித்து ஆண்ட்ரியா..

அப்டேட் விட்றா…

இப்போது அதற்கு பதிலளித்த விஜய் ரசிகர் ஒருவர், டூ ஏர்லின்னு சொல்லி ஒரு வாரம் ஆகுது, டேய் …. அப்டேட் விட்றா என கெட்டவார்த்தையுடன் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

இது வெங்கட்பிரபு, படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சியடைய செய்தது.

எப்படீன்னு நீங்களே சொல்லுங்க..

இதற்கு பதில் சொன்ன இயக்குனர் வெங்கட்பிரபு, சொல்லலாமுன்னு தான் நினைச்சேன். ஆனா இதுக்கு மேல எப்படீன்னு நீங்களே சொல்லுங்க விஜய் பிளட்ஸ், என்று பதில் தந்துள்ளார்.

GOAT அப்டேட் கேட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகருக்கு, வெங்கட்பிரபு கொடுத்த இந்த செருப்படி பதில் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Brindha

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …

Exit mobile version