In a recent interview, actress Vijayashanthi opened up about a deeply personal topic that many fans have been curious about: her decision not to have children.
நடிகை விஜயசாந்தி குறித்து புதிதாக சொல்லி தெரிய வேண்டியதில்லை. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அசத்திருக்கும் விஜயசாந்தி அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் நடித்து வரக்கூடிய ஒரு நபர்.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளவதற்கான காரணத்தை முதன்முதலாக கனத்த மனதுடன் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிபடங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
இவர் வைஜயந்தி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். அந்த படத்தில் துணிச்சாலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக நடிகை விஜயசாந்தி நடிப்பு இருந்தது. இன்றும் கூட பலர் இவரை விஜயசாந்தி ஐபிஎஸ் என்று அழைக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு அவருடைய போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவளித்து மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் விருப்பமான நட்சத்திர பேச்சாளராக இருந்தவர். 1998 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த இவர் அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
தற்போது காங்கிரஸில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமான விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் குழந்தை பெற்றுக் கொள்ளாத குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தை பெத்துக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். ஏனென்றால் அதுதான் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான விஷயம்.
ஒரு பெண் தாயாக தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய அழகான ஒரு விஷயம் அது. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அந்த விஷயத்தை பற்றி நான் மிகவும் யோசித்தேன்.
எங்கேயோ ஒரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருக்கும் போது நான் வேறு இடத்தில் இருந்தால் அதை வைத்து என்னை பிளாக் மெயில் பண்ணுவாங்களோ..? என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
ஏன்னா.. அது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு மாநிலத்தில் அப்போது இருந்த சூழ்நிலை இது. பொது வாழ்க்கையில், ஒரு விஷயத்துக்காக நாம சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் பொழுது.. எது வேணாலும் நடக்கலாம்.. என்று எனக்கு தோன்றியது.
ஆண்களுக்கு இது ஓகே. ஆனால் பெண்களுக்கு இது கொஞ்சம் கடினமான விஷயம். அந்த விஷயத்தை பற்றி நான் மிகவும் யோசித்தேன். இது வேறு எங்கேயோ போய் முடியும் என்று எனக்கு தோன்றியது.
இதனால் எனக்கு குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். மக்கள் தான் என்னுடைய குழந்தைகள் என்று நினைத்து வாழ ஆரம்பித்தேன். இந்த விஷயத்தை என்னுடைய கணவரிடமும் சொன்னேன்.
அவரும் என்னுடைய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என பேசி இருக்கிறார் விஜயலட்சுமி. இவருடைய இந்த காரணம் ரசிகர்களை உண்மையிலேயே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
Summary in English : In a recent interview, actress Vijayashanthi opened up about her personal life and why she hasn’t pursued having a baby. She shared that, while many people assume that motherhood is a natural next step for everyone, her journey has been quite different. For her, the focus has always been on her career and the passion she feels for acting.