பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் உடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் அவர்கள் இன்று மிகப்பெரிய நடிகர். ஆனால், நான் அவர் அறிமுகமான காலத்திலிருந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில், அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. இப்பொழுது என்னையே எடுத்துக் கொண்டாலும் எனக்கென பெரிய ஹீரோ அமைய வேண்டும்.. பெரிய இயக்குனர் அமைய வேண்டும்.. அந்த படத்தில் நான் எவ்வளவு நடித்தாலும் அந்த நடிப்புக்கு ஒரு மரியாதை இருக்கும்.. ரசிகர்களை அந்த நடிப்பு சென்று சேரும்.
ஆனால், புது முக இயக்குனர்கள் புதுமுக நடிகர்கள் இவர்களுடைய படத்தில் என்னதான் விழுந்து விழுந்து உயிரை கொடுத்து நடித்தாலும் ஒரு பலனும் கிடையாது. சம்பளம் மட்டும் தான் கிடைக்கும்.
அதுபோல நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்தது. நடிகர் விஜய்யை நடிப்பதற்கு தகுதியற்றவர் என்றுதான் ஒட்டுமொத்த திரையுலகமும் பார்த்தது.
ஆனால், அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை விட்டுக் கொடுக்கவில்லை. அவரை சொல்லி சொல்லி.. அடித்து அடித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.
சாதாரணமாக நடிகர் விஜய் வாரிசு நடிகர் தன்னுடைய அப்பாவின் தயவில் வந்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நானும் பார்க்கிறேன். ஆனால், உண்மை அப்படி அல்ல.
எந்த அப்பாவும் செய்யாத பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு ரகசியத்தை சொல்கிறேன்.. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் இயக்குனராக நடிகர் விஜய்யை அடி வெழுத்திருக்கிறார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.
அப்போதெல்லாம் விஜய் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும். ஏன்டா.. உன்னை நம்பி எவ்வளவு பணம் கடன் வாங்கி படம் எடுத்துட்டு இருக்கேன்.. நீ ஒரு சீனு சரியா நடிக்காமல் இப்படி பண்ணிட்டு இருக்க.. என்று படப்பிடிப்பு தளத்திலேயே எல்லோரும் முன்பும் அடிப்பார்.
அப்படி அடிவாங்கி வளர்ந்தவர் தான் நடிகர் விஜய். ஒரு கட்டத்தில் அவருக்கென பெரிய இயக்குனர்கள்.. நல்ல கதை அமைய ஆரம்பித்தது.. அவருடைய மார்க்கெட் ஏறுமுகமாக மாறியது.
எல்லோரும் சாதாரணமாக சொல்வது போல விஜய் வந்துவிடவில்லை. இது என்னை போன்ற என்னுடைய செட்டில் இருந்த எல்லா நடிகர்களுக்குமே தெரியும் என பேசியிருக்கிறார் நடிகர் பொன்னம்பலம்.
Summary in English : Villain actor Ponnambalam recently opened up about his experiences with actor Vijay during the early days of Vijay’s career. It’s pretty fascinating to hear how even the biggest stars had their share of struggles before hitting it big. Ponnambalam reminisced about the times they spent on set, where Vijay was just starting out and trying to find his footing in the industry.