அட்ஜெஸ்ட்மென்ட்.. டேட்டிங் ரெண்டும் ஒன்னு தான்.. ஓபனாக பேசிய நடிகை வினோதினி!!

தமிழ், மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை வினோதினி தமிழ் தொலைக்காட்சிகளிலும் சில செய்திகள் பக்குவமாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இருந்தாலும் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு கன்னட படங்களில் நடித்த இவரை ஸ்வேதா என்று அழைத்தார்கள். ‌

அட்ஜெஸ்ட்மென்ட்.. டேட்டிங் ரெண்டும் ஒன்னு தான்..

தற்போது திரை உலகில் குறிப்பாக கேரளத் திரை உலகில் வெளி வந்த ஹேமா கமிஷன் தந்த பகிரங்க அறிவிப்பானது பெண்களுக்கு திரைத்துறையில் நடக்கின்ற கொடுமைகளை பற்றி விரிவாக விளக்கியதை அடுத்து திரையுலகமே கிடுகிடுத்தது.

இந்நிலையில் திரைப்படத்தில் நடிக்கின்ற நடிகைகள் அந்தப் படத்தில் நடிப்பதற்கும் மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்கும் முக்கியமாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்களை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே நடிக்க முடியும் என்ற விஷயம் வெளிவந்தது.

இதைத் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்டால் பாதிக்கப்பட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் அது குறித்து உண்மை நிலையை அவர்கள் வாயாலயே பகிர பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வினை தடுக்க வழி இல்லையா? என்ற கேள்வியையும் எழுப்பியது.

எனினும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு விதமான பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ள வேளையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை வினோதினி இது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் இவர் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசும் போது அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதும் டேட்டிங் செய்வதும் ஒன்று தான் என்று ஓப்பனாக சொல்லி அனைவரையும் அதிரவிட்டிருக்கிறார்.

ஓபனாக பேசிய நடிகை வினோதினி..

மேலும் பாலியல் ரீதியான கொடுமைகளை பற்றி கூறிய அவர் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. இருவரும் உடன் பட்டு தான் அதற்கு செல்கிறார்கள். எனவே டேட்டிங் போவதும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதும் எந்த ஒரு வித்தியாசம் இல்லாத ஒரு நிகழ்வு தான் எனக் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து விருப்பப்பட்டு இந்த இரண்டும் நடப்பதால் இது எப்படி குற்றமாகும் என்ற கேள்வியை கிளப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் உடன்பட்டு செல்லும் நடிகைகள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளத்தான் ஒப்புக்கொள்கிறார்கள் என்பதையும் உடைத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் டேட்டிங் குறித்து வினோதினி கூறிய விஷயமானது வேகமாக பரவி வருவதோடு அவர் கூற்றில் உண்மை உள்ளது என்று பலரும் ஆமோதித்து உள்ளார்கள்.

எனவே இந்த விஷயமானது தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்களும் அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் டேட்டிங் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version